மாநில இளைஞர் விருது: விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநில இளைஞர் விருது: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூன் 27, 2019
Share
நாமக்கல்: சமூதய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், 'முதல்வர் மாநில இளைஞர் விருது' சுதந்திரத்தினத்தன்று, 15 முதல், 35 வயது வரை உள்ள, மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியது. நடப்பு ஆண்டு விருதுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2018, ஏப்., 1 முதல், கடந்த

நாமக்கல்: சமூதய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், 'முதல்வர் மாநில இளைஞர் விருது' சுதந்திரத்தினத்தன்று, 15 முதல், 35 வயது வரை உள்ள, மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியது. நடப்பு ஆண்டு விருதுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 2018, ஏப்., 1 முதல், கடந்த மார்ச், 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர், சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in என்ற முகவரியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாள், ஜூலை, 2 மாலை, 5:00 மணி. இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X