பொது செய்தி

தமிழ்நாடு

மின்காந்த அலை இல்லை என நிரூபித்தால் போராட்டம் வாபஸ்: பா.ஜ.,க்கு உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் சவால்

Added : ஜூன் 27, 2019
Advertisement

ஈரோடு: 'உயர் மின் கோபுர மின் கம்பிகளுக்கு கீழே, மின் காந்த அலைகள் இல்லை என, பா.ஜ., நிரூபித்தால், நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்' என, உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் சார்பில், பா.ஜ.,வுக்கு சவால் விடுத்துள்ளனர்.
விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும், உயர் மின் கோபுர கம்பிகளை, சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் அல்லது மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும் என, உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு போராடி வருகிறது. கடந்த, 15ல், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, உயர் மின் கோபுரங்களுக்கு கீழ் நின்று, டியூப் லைட்டை கையில் பிடித்தபோது, எந்த மின் இணைப்பும் இன்றி பல்ப் எரிந்தது. அவர் மீது எலக்ட்ரிக் இன்டிகேட்டரை வைத்ததும் அது ஒளிர்ந்தது. அந்த அளவுக்கு மின் காந்த அலை ஏற்படுவதாக, குற்றம்சாட்டி இது குறித்து நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த தெற்கு மாவட்ட, பா.ஜ.,வினர், உயர் மின் கோபுரத்தால் மின் காந்த அலை பரவவில்லை என்றும், சாதாரண இடங்களில் நமது உடலில் இன்டிகேட்டரை வைத்தால் ஒளிரும் எனக்கூறி, கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். மனுவில், 'எம்.பி., பொய் சொல்வதாகவும், அதுபற்றி அறிவியல் பூர்வமாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றும்' வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், உயர் மின் கோபுர பாதிப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஒருங்கிணைப்பாளர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது: பவர் கிரீட் நிறுவனமே, உயர் மின் கோபுரத்தின் கீழ், மின் தூண்டல் உள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது. மின்சாரத்தை சோதிக்க இரண்டு வகை டெஸ்டர் உள்ளது. ஒன்று லைன் டெஸ்டர், மற்றொன்று கன்டினியூட்டி டெஸ்டர் என்பர். லைன் டெஸ்டரில் மின்சாரம், மின் கம்பியில் உள்ளதை சோதித்து பார்க்கலாம். அதுபோல, உயர் மின் கோபுரத்தின் கீழ் நின்று, நமது உடலில் மின்னோட்டம் உள்ளதையும் அறியலாம். அதைத்தான், எம்.பி., கணேசமூர்த்தி செய்து உறுதிப்படுத்தினார். ஆனால், பா.ஜ., நிர்வாகிகள் கன்டினியூட்டி டெஸ்டர் வகையை சேர்ந்த, உள்ளே பேட்டரி உள்ள டெஸ்டரை வைத்து சோதித்தனர். அதில், ஏற்கனவே பேட்டரி உள்ளதால், அதனுடன் மற்றொரு பொருளாக நமது உடல் படும்போது, விளக்கு ஒளிர்ந்து மின் ஓட்டத்தை காட்டும். இது தவறாகும்.இரண்டு டெஸ்டர்களும் வேறு என்பதையும், உயர் மின் கோபுரத்தின் கீழ் மின்சாரம் பாய்கிறது என்பதையும் உறுதிப்படுத்த, நாங்கள் தயாராக உள்ளோம். உயர் மின் கோபுர அமைப்புகளுக்கான அலுவலகங்களை கூட, கோபுரங்களுக்கு கீழ் அமைப்பதில்லை. 50 மீட்டர் தூரத்தில்தான் அமைப்பர். எங்களது கூற்றை மறுத்து, பா.ஜ., கூறுவது சரி என நிரூபித்தால், நாங்கள் போராட்டத்தை கைவிட தாயார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X