வீட்டில் மூதாட்டி கொலை: கணவருக்கு போலீஸ் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் மூதாட்டி கொலை: கணவருக்கு போலீஸ் வலை

Added : ஜூன் 27, 2019

ஓசூர்: சூளகிரி அருகே, வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில், மூதாட்டி உடல் மீட்கப்பட்டது. மாயமான அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கானலட்டியை சேர்ந்தவர் ராமையா, 80. இவரது மனைவி பில்லம்மா, 75. இவர், நேற்று காலை, வீட்டு படுக்கை அறையில் வலதுபக்க காது, இடது கை மணிக்கட்டு போன்ற இடங்களில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவருக்கு அருகே, கத்தி போன்ற ஆயுதம் ஒன்று கிடந்தது. தகவலின்படி அங்கு சென்ற சூளகிரி போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பில்லம்மாவின் கணவர் ராமையா, மாயமாகி உள்ளதால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமையா, தன் மனைவி பில்லம்மாவை கொலை செய்திருக்கலாம் எனவும், அவரை கண்டுபிடித்தால் தான், கொலைக்கான காரணம் தெரியவரும் எனவும், போலீசார் கூறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X