ஐ.சி.சி., ஒருநாள் தரவரிசை: இந்தியா முதலிடம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன்; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது. நம்பர் 1ஐசிசி சார்பில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா 51 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில் 6 ஆயிரத்தி 266

லண்டன்; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையிலும் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. ஏற்கனவே, ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது.



latest tamil news





நம்பர் 1


ஐசிசி சார்பில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா 51 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில் 6 ஆயிரத்தி 266 புள்ளிகளை பெற்றுள்ளது. ரேட்டிங்கிலும் 123 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.

2வது இடத்தில் 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்தி 84 புள்ளிகளை பெற்று , இங்கிலாந்து அணி, தரவரிசையில் 122 மதிப்பெண்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.


latest tamil news





டெஸ்ட் தரவரிசை


ஏற்கனவே கடந்த மே 2ம் தேதி ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், 32 போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 3 ஆயிரத்தி 631 புள்ளிகளைப் பெற்று 113 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. அதில் 23 போட்டிகளில் பங்கேற்ற நியூசிலாந்து அணி 2 ஆயிரத்தி 547 புள்ளிகளுடன், 111 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை பெற்றது.


கோஹ்லி நம்பர் 1


விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றுள்ளதை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி உள்ளனர்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
27-ஜூன்-201913:19:26 IST Report Abuse
Naren சமீபத்திய இந்திய கிரிக்கெட் ஆட்டங்களில் நமது வீரர்களிடையே அலட்சியம் தெரிகிறது. நாம் பழித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் படு சுட்டியாக இருக்கிறார்கள், நாம் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அமைதியாக வென்று கொண்டிருக்கிறார்கள்.. நாம் எல்லவற்றிலும் முதல் என்று தலைகனத்தில் கோப்பையை கோட்டை விட்டு விடுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
27-ஜூன்-201912:26:42 IST Report Abuse
J.Isaac பிஹாரில் 150 குழந்தைகள் மூளை காச்சலினால் இறந்ததிலும் இந்தியா முதலிடம்
Rate this:
Balaji - Kuala Lumpur,மலேஷியா
27-ஜூன்-201913:43:19 IST Report Abuse
Balajiissac எதுக்கு எத பேசணும்னு இல்லையா. உங்களுக்கு எல்லாம் இந்தியா கேவலமா பேசலென தூக்கம் வராதே....
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
27-ஜூன்-201911:13:59 IST Report Abuse
agni வாழ்த்துக்கள் .உலக கோப்பையும் நமதே.
Rate this:
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
27-ஜூன்-201911:31:22 IST Report Abuse
sivamஅம்மா உலக கோப்பையை வாங்கிட்டு அவங்க பீர் பாட்டிலே வாயில் வச்சுக்கிட்டு போயிருவாங்க, நீங்க என்ன பண்ணுவீங்க,...
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )விளையாட்டை ரசிக்க கூட தெரியாது ஆனால் கூத்தாடிகளுக்கு பால்குடம் எடுக்கும் மரமண்டைகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X