நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை: முதல்வர் அடிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை: முதல்வர் அடிக்கல்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (6)
Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.
விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ரூ.1,689 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால், வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். தினமும், 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் திறன் கொண்டது.
பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., கூறுகையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில், இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படும். இது நிறைவேறும் போது, தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும். 2021ல் இந்த திட்டம் நிறைவு பெற்று, செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எங்கெங்கு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி, வறட்சியான கடலோர மாவட்டங்களில் குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும். ஜோலார்ப்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்திற்குள் செயல்படுத்தப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X