ஜப்பான் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஒஷாகா ; ஜப்பான் நாட்டின் ஒஷாகா நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் சின்ஷோ அபே வை சந்தித்து பேசினர்.





பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயரதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதேபோல் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றார்.
இந்த சந்திப்பில் பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. பேச்சுவார்த்தையில் ஜப்பான் பிரதமர் மீண்டும் இந்திய பிரதமர் மோடியின் லோக்சபா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.




மேலும், ''அடுத்து எனது முறை. எனது இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்,'' என்று சின்ஷோ அபே கூறினார்.


விஜய் கோகலே

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், '' பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது. மும்பை-அகமாதாபாத் அதிவேக ரயில்பாதை மற்றும் வாரணாசியில் கருத்தரங்கு கூடம் உள்ளிட்ட விசயங்கள் குறித்து மோடியும் அபேயும் பேசினர்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-201919:04:41 IST Report Abuse
ஆப்பு அபே , அதான் ஜப்பான் பிரதமர் லேகியம் சாப்பிட்டு, யோகா செஞ்சு நல்லா புஷ்டியா இருக்காரு. இது மோடி ஐயாவின் வெற்றி. இதே மாதிரிதான் ட்ரம்ப், ஜின் பிங் , புட்டின் எல்லோரும் அமோகமா, ஆரோக்கியமா இருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
T Rajendran -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூன்-201914:34:56 IST Report Abuse
T Rajendran ஜப்பான் நாட்டு துனை முதல் அமைச்சர் கானோம் ( சுடலையை தான் சொல்ரேன்)
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜூன்-201913:36:14 IST Report Abuse
ஆரூர் ரங் சப்பான் துணைப்பிரதமரை இங்கேயே சென்னையில் விட்டுட்டு போனது தப்புதான் ரொம்ப வருத்தத்துல இருக்காரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X