ஜப்பான் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை| Dinamalar

ஜப்பான் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (3)

ஒஷாகா ; ஜப்பான் நாட்டின் ஒஷாகா நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் நாட்டு பிரதமர் சின்ஷோ அபே வை சந்தித்து பேசினர்.





பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்திய உயரதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதேபோல் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் பங்கேற்றார்.
இந்த சந்திப்பில் பயங்கரவாதம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. பேச்சுவார்த்தையில் ஜப்பான் பிரதமர் மீண்டும் இந்திய பிரதமர் மோடியின் லோக்சபா வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.




மேலும், ''அடுத்து எனது முறை. எனது இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்,'' என்று சின்ஷோ அபே கூறினார்.


விஜய் கோகலே

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், '' பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது. மும்பை-அகமாதாபாத் அதிவேக ரயில்பாதை மற்றும் வாரணாசியில் கருத்தரங்கு கூடம் உள்ளிட்ட விசயங்கள் குறித்து மோடியும் அபேயும் பேசினர்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X