அமெரிக்காவை மற்ற நாடுகள் சுரண்டுதாம்: டிரம்ப் வேதனை

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (8)
Advertisement

ஒசாகா ; அமெரிக்காவை காலம்காலமாக எல்லா நாடுகளும் சுரண்டுகின்றன. இனி அது நடக்கப்போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


ஜி20 மாநாடு :


ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஜப்பான் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜப்பானில் பேச்சு நடத்த இருப்பதாகக் கூறினார். அதில் பல நாடுகள் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.


சென்ட் செலுத்தாத சீனா :

நீண்ட காலமாக அனைத்து நாடுகளும் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சுரண்டி வருவதாகவும், ஆனால் இனி அது நடக்காது என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்றும் அவர் தெரிவித்தார். தான் அதிபராவதற்கு முன்னர் ஒரு சென்ட் தொகை கூட அமெரிக்காவுக்கு கட்டாத சீனா, தற்போது பில்லியன் கணக்கான டாலர்கள் செலுத்துவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

புதின் சந்திப்பு :

ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, ''புதினை பொறுத்தவரை அவருடன் சிறப்பான உரையாடல் அமையும்,'' எனக் கூறிய டிரம்ப், ஆனால் அவருடன் நான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு தேவையில்லாத விஷயம்,'' என்றும் வேடிக்கையாக கூறினார்.


முல்லர் அறிக்கை :

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றி விசாரணை நடத்திய ராபர்ட் முல்லர் அறிக்கை வெளியான பிறகு, முதல் முறையாக புதினை டிரம்ப் சந்தித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தையும் டிரம்ப் ஏற்கனவே துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-201919:02:14 IST Report Abuse
ஆப்பு இந்திய மக்கள் வாழ்க்கைத் தரம் உயர அமெரிக்கா சென்ற H1 மக்களே பெரிய காரணம். அதனால் இரு நாடுகளும் பயனடைந்தன. அதே மாதிரி அமெரிக்க நிறுவனங்கள் தொழிற்சாலைகளை சீனாவுக்கு நகர்த்திய போது சுமார் 80 கோடி சீனர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வந்தார்கள். தற்போது அமெரிக்காவில் மக்களுக்கு வேலை இல்லை...அங்கே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ட்ரம்ப் ஒண்ணும் வீம்புக்கு செய்ய வில்லை. தன் நாட்டுக்கு எது நல்லதோ அதைச் செய்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜூன்-201916:52:32 IST Report Abuse
Endrum Indian நான் நான் இது தான் அகம்பாவத்தினால் வரும் ஆணவம். இது அழிவைத் தான் கொடுக்கும். 1) நீண்ட காலமாக அனைத்து நாடுகளும் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சுரண்டி வருவதாகவும், 2) தான் அதிபராவதற்கு முன்னர் ஒரு சென்ட் தொகை கூட அமெரிக்காவுக்கு கட்டாத சீனா, தற்போது பில்லியன் கணக்கான டாலர்கள் செலுத்துவதாகவும். கதை அடிக்கிறதுக்கு ஒரு அளவே இல்லையா. அச்சு அசலாக சுடலை ஸ்டையிலில் தமிழர் கஷ்டப்படுவது போல மற்றவர்களினால் என்று கூறுவது போல் இருக்கின்றது. வரி கட்டவேண்டுமென்றால் இந்தியாவில் அது அந்த பொருள் விற்பனையில் சுணக்கம் வரும் என்பது அந்த பொருளை பற்றியது ஆகவே என் வியாபாரம் படுத்து விடும் என்று கூக்குரலிடுவது இதிலிருந்து தெரிகின்றது. வரி கட்டவேண்டியது வாங்குபவன், நீ தான் அந்த வரியை வாங்குபவர் தலை மீது தான் வைக்கிறாய் நீ கட்டுவதில்லையே??? அதாவது உன் பொருள் விலை அதிகம் ஆகிவிடும் என்று உன் பயம். அப்படி நீ என்ன பொருளை விற்கின்றாய் இந்தியாவிற்கு ரூ . 35 லட்சம் முதல் ரூ . 3.5 கோடி வரை ஒரு இரு சக்கர வாகனம் விலை. இங்கு அதே மாதிரியான இரு சக்கர வாகனம் குறைந்த விலை ரூ . 45000 அதிகம் ரூ . 1.5 லட்சம். நீ விற்பதை வாங்குபவனுக்கு விலை பற்றிய கவலையே இல்லை, அது தெரியுமா தெரியாதா உனக்கு ??அது எவ்வளவு விற்கவேண்டுமோ அவ்வளவு தான் விற்கும் . ஆகவே ஐயோ குய்யோ என்று ஓலமிடாமல் உன் வேலை பார் ட்ரம்ப்??
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
27-ஜூன்-201915:41:58 IST Report Abuse
Asagh busagh டிரம்ப்பின் பாலிசி பாதி உண்மையோட பெரும்பாதி பொய்யய்யும் கலந்து அடிச்சுவிட வேண்டியது. இதுல உண்மை எது பொய்யேதுன்னு கண்டுபிடிக்க முடியாம மண்ட குளம்பிரும். கொடுத்தது உண்மை தான், அமெரிக்காவுக்கு இந்தியா போன்ற நாடுகளோடு trade imabalance அந்த நாடுகளுக்கு சாதகமா இருக்குது தான். ஆனா அதுக்கு காரணம் வரி விதிப்பு விதிகாசாரம் மட்டும் தான் காரணம் இல்ல. அமெரிக்காகாரனின் கன்சம்ஷன்னும் தான். தேவை அதிகமாக அதிகமாக சல்லிசான விலையில கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம். பொருளோ இல்லை சேர்விஸ்சோ சல்லிசா வாங்குனாதான் கம்பனிகள் லாபம் பார்க்க முடியும். டிரம்ப் எவ்வளவு மிரட்டினாலும் இதுக்கு முடிவே இல்ல. உலகம் அழிஞ்சா தான் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X