மும்பை ; கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன், பினாய் கொடியேறியை கைதுசெய்ய மும்பை போலீசார் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளனர்.

பார் டான்சர் புகார்
பினாய் மீது மும்பையை சேர்ந்த பார் டான்சர், பாலியல் பலாத்காரம் மற்றும் ஆசைகாட்டி மோசம் செய்தல் பிரிவுகளில் மும்பை போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் மீது இந்த பிடிவாரன்டை மும்பை போலீசார் பிறப்பித்துள்ளனர்.
விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை
மேலும், பினாய் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாதிருக்க அனைத்து விமான நிலையங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக பினோய் தலைமறைவாக உள்ளார்.

ஜாமின் மனு விசாரணை ;
கடந்த வாரம் மும்பை போலீசார் பினாயை கைது செய்ய கேரளா வந்தபோது அவர் தப்பிச் சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன்மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE