தண்ணீரில் தந்தை, மகள்: கண்ணீரில் உலகம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (29)
Advertisement
Photo,Drowned Father, Daughter, Migrants, Border Peril, தண்ணீரில் தந்தை, மகள் உடல், கண்ணீரில் உலகம்

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு அகதியாக செல்ல ஆற்றில் நீந்திய போது தந்தையும், மகளும் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தந்தையும், அவரது சட்டைக்குள் உடல்புதைத்து, கழுத்தை பற்றியபடி குழந்தையும் கரை ஒதுங்கிய புகைப்படம், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வைரலாக பரவி வருகிறது.


பாலம் மூடல்எல் சால்வடார் நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின்ஸ். இவரது மனைவி டானியா வனீசா அவலோஸ். இவர்களுக்கு வலேரியா என்ற 2 வயது நிரம்பாத மகள் உள்ளார். அவர்கள் 3 பேரும் கடந்த வாரம் பிழைப்பு தேடி அமெரிக்காவில் தஞ்சம் அடைய முடிவு செய்தனர். இதற்காக ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்த அவர்கள், அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள மெக்சிகோவின் மடமோரஸ் நகருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 23) வந்தனர். அங்கு, சர்வதேச எல்லையில் உள்ள பாலம் மூடப்பட்டிருந்தது. மறுநாள் தான் அதன் வழியே செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


சீற்றம்அங்கு காத்திருக்க விரும்பாத அவர்கள், அங்குள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்தால், அமெரிக்காவிற்கு எளிதாக சென்றுவிடலாம் என கருதியுள்ளனர். இதனையடுத்து மார்ட்டின்ஸ், மகளை, தனது சட்டைக்குள் நுழைத்து சுமந்தபடி நீச்சலடித்து சென்றுள்ளார். மறுகரையில் உள்ள டெக்சாஸ் பிரவுன்வில்லி நகரை தொட முடியாமல், ஆற்றின் சீற்றத்தில் சிக்கினார். இதனை பார்த்த அவரது மனைவி அவோலியா மெக்சிகோ கரைக்கு திரும்பிவிட்டார்.அதிர்வலைகள்மார்ட்டின்சும், அவரது சட்டைக்குள் உடல் புதைந்தபடி மகள் வலேரியாவும் இறந்து சடலமாக கரை ஒதுங்கினர். இந்த புகைப்படம் நேற்று(ஜூன் 26) மெக்சிகோ நாளிதழில் வெளியானது. பின்னர் சர்வதேச அளவில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விமர்சனம்2015 ல் சிரியாவில் இருந்து சென்ற போது, படகு கவிழ்ந்த விபத்தில், 3 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்கிய படம் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று, இந்த படமும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உலகம் முழுவதும் பலர், எல்லை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201919:53:10 IST Report Abuse
Rajagopal மத்திய அமெரிக்க நாடுகளில், கஞ்சாப் போன்ற போதை வியாபாரம் அதிகரித்து, அரசாங்கம் செயலற்றுப் போய், மக்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இன்றி, தினமும் கொலையும், கொள்ளையும் அதிகரித்து, நாட்டை விட்டு அகதிகளாக ஓட ஆரம்பித்து விட்டார்கள். வெனிஸு வேலாவில் பணம் முற்றும் மதிப்பிழந்து மக்கள் அகதிகளாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள் (சீமான் அவர்கள் இதை அறிய வேண்டும்). இது எரியும் கட்டிடத்திலிருந்துக் குதிப்பதைபோல. வேறு வழியில்லை. மக்கள் இம்மாதிரி நிலையில் சட்டங்களை பற்றி எண்ணுவதில்லை.எப்டியாவதுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று மனா நிலையில் ஓடுகிறார்கள். ஆயிரக் கணக்கான மைல்களைக் கடந்து ஓடி வருபவர்கள் பைத்தியக்காரர்களோ, வெறியர்களோ அல்ல. இந்த மாதிரி நிலையில், மக்கள் இந்த மாதிரிப் பரிதாபமான முடிவை அடைகிறார்கள். யாராலும் ஏதும் செய்ய இயலாத நிலை. அமெரிக்கவைக் குற்றம் சொல்லக் கூடாது. நீரில் முழுகி உயிரிழந்தவனையும் குறை சொல்ல இயலாது. நாடுகள் மக்களுக்கு வாழ்வாதாரம் தர இயலாததால் வந்த வினை இது.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
27-ஜூன்-201918:10:37 IST Report Abuse
Subramanian Arunachalam இதில் அமெரிக்காவின் தவறு என்ன . ஒரு நாட்டில் அகதிகளை அனுமதிக்கு முன் தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் . அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் பல குற்றங்களை செய்து விட்டு , பலரின் சொத்தை அபகரித்து விட்டு , அமெரிக்காவிற்கு அகதியாக வரவேண்டும் என்றால் அதை எப்படி அனுமதிப்பது . இந்த நிகழ்வில் யார் இவரை ஆற்றை நீந்தி வர சொன்னது . மேலும் இந்த செய்தி மற்றும் புகை படங்களுக்கு பின் பெரிய சதி உள்ளது . அதே போல் தான் 2015 ஆண்டு வெளியான மூன்று வயது குழந்தையின் படமும் . மூன்று வயது குழந்தையை அழைத்து வந்தது யார் . சொந்த நாட்டில் ஒழுங்காக உழைத்து பிழைக்க முடியாத சிலர் அகதிகளாக வெளி நாட்டிற்கு செல்ல முயற்சிக்கின்றனர் . இந்த அகதிகள் மூலம் வளர்ந்த நாடுகளை கைப்பற்ற முஸ்லீம் தலைவர்கள் முயற்சிக்கின்றனர் . முன்காலத்தில் படை எடுப்பு மூலம் நாடுகளை கைப்பற்றினர் . தற்போது அகதிகள் என்ற போர்வை மூலமாக . தற்போது ஐரோப்பா , அமெரிக்கா , கனடா நாடுகள் இந்த சதி திட்டத்தை புரிந்து கொண்டு அகதிகளை அனுமதிப்பதில்லை . 57 முஸ்லீம் நாடுகள் உள்ளது . அங்கு ஏன் ஒரு அகதியும் செல்வது இல்லை . தயவு செய்து யோசியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
27-ஜூன்-201917:48:24 IST Report Abuse
Somiah M திருட்டுத் தனமாக வேறு ஒரு நாட்டிற்குள் செல்வது என்பது குற்ற செயல் என்பதில் சந்தேகமே இல்லை .ஆனால் அவர்களின் நிலையை குறிப்பாக தந்தையும் மக்களும் இறந்து கிடைக்கும் போட்டோவை பார்க்கும் பொழுது மனது பரிதவிக்கத்தான் செய்கிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X