பறவை மோதிய விமானம்; பக்குவமாய் தரை இறக்கிய வீரர்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

அம்பாலா ; பறவை மோதிய விமானத்தை பக்குவமாய் கையாண்டு, சுமையை குறைத்து லாவகமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.



latest tamil news



பறவை மோதியது :


அரியானா மாநிலத்தின், அம்பாலா விமானப் படைத் தளத்தில் இருந்து இன்று காலை ஜாகுவார் விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று, விமானத்தின் மீது மோதவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அந்த விமானத்தின் எஞ்சின்கள் செயல் இழந்தன.


சுமை குறைப்பு :


இதன் காரணமாக விமானி மீண்டும் அவசர அவசரமாக விமானத்தை பத்திரமாக தரை இறக்க முயற்சி செய்தார். விமானத்தின் சுமையை குறைப்பதற்காக, எரிபொருள் டேங்குகளையும், பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளையும் பாதுகாப்பாக விடுவித்தார்.


latest tamil news


எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பயிற்சி வெடி குண்டுகள் எதுவும் வெடிக்கவில்லை என்றும் அவற்றை மீட்டு விட்டதாகவும் விமானப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


விமானிக்கு பாராட்டு ;


சமீப காலமாக, இந்திய விமானப்படை விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலையில், பறவை மோதிய விமானத்தை லாவகமாக கையாண்டு, சேதமின்றி தரை இறக்கிய விமானியை விமானப்படை அதிகாரிகள், சக ஊழியர்கள் பெரிதும் பாராட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
27-ஜூன்-201919:11:52 IST Report Abuse
S.Ganesan இந்த நிகழ்ச்சிக்கும் காங்கிரஸுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பறவை விமானத்தில் மோதியதற்கு , காங்கிரஸ் எப்படி பொறுப்பாக முடியும் ? விமானியின் திறமை பாராட்டுக்குரியது. மேலும் விமானங்கள் விபத்துக்குள்ளாவது அவை சரிவர பராமரிக்கப்படாதது முக்கிய காரணமாகும்.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
27-ஜூன்-201913:15:01 IST Report Abuse
வல்வில் ஓரி காங்கிரசுக்கும் அந்த பறவைகளுக்கும் சம்பந்தம் இல்லை
Rate this:
Cancel
RAMAKRISHNAN.S - THENI,இந்தியா
27-ஜூன்-201912:53:29 IST Report Abuse
RAMAKRISHNAN.S சூப்பர் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X