நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக்கணக்கு முடக்கம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (6)
Advertisement
Nirav Modi, swiss, bank, swiss, நிரவ் மோடி, வைர வியாபாரி, வங்கி மோசடி, வங்கிக்கணக்கு, முடக்கம்,சுவிட்சர்லாந்து,

ஜெனிவா: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பெயரில் உள்ள 4 வங்கிக் கணக்குகளை சுவிட்சர்லாந்து முடக்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பினார். பிரிட்டன் தலைநகர், லண்டனில், நிரவ் மோடி சமீபத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.






இந்நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வியின் 4 வங்கிக் கணக்குகளை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக்கணக்குகளில் 6 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.286 கோடி பணத்தை, அந்த வங்கிக்கணக்கிற்கு சட்ட விரோதமாக நிரவ் மோடி டெபாசிட் செய்துள்ளதாகவும், இதனால், அந்த கணக்குகளை முடக்க வேண்டும் என சுவிஸ் அரசுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜூன்-201917:40:18 IST Report Abuse
Lion Drsekar அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஸ்விஸ் கணக்கு கணக்கு என்று எல்லோர் பெயரும் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது, தினம் தினம் பல லட்சம் கோடி என்று செய்தியும் வந்து கொண்டு இருக்கிறது, அன்றாட நிகழ்வுகள் போல் எல்லாமே பொய்யாகிப் போகிறதே ? காதால் கேட்பதும் பொய், கண்ணால் காண்பதும் பொய், தீர விசாரிப்பதையு அடிவைட பொய் என்றாகிவிட்ட நிலையில், எங்கே தேடுவேன் நிஜத்தை எங்கே தேடுவேன், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201917:33:53 IST Report Abuse
Raj நம்ம ஊர்லே இந்தளவுக்கு பண்றதே பெரிய விஷயம். மலை முழுங்கி கிட்டேருந்து ஒரு ஆறு கல்லாவது கிடைச்சுதே ...வக்கீல் பீஸ் கொடுக்கவாவது உபயோகமாகும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Narayanasamy - Doha,கத்தார்
27-ஜூன்-201916:47:34 IST Report Abuse
Srinivasan  Narayanasamy 6 Million Doller Means - only 41 crore indian rupees.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X