நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக்கணக்கு முடக்கம்| Dinamalar

நிரவ் மோடியின் சுவிஸ் வங்கிக்கணக்கு முடக்கம்

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (6)
Nirav Modi, swiss, bank, swiss, நிரவ் மோடி, வைர வியாபாரி, வங்கி மோசடி, வங்கிக்கணக்கு, முடக்கம்,சுவிட்சர்லாந்து,

ஜெனிவா: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பெயரில் உள்ள 4 வங்கிக் கணக்குகளை சுவிட்சர்லாந்து முடக்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பினார். பிரிட்டன் தலைநகர், லண்டனில், நிரவ் மோடி சமீபத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.






இந்நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வியின் 4 வங்கிக் கணக்குகளை சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக்கணக்குகளில் 6 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.286 கோடி பணத்தை, அந்த வங்கிக்கணக்கிற்கு சட்ட விரோதமாக நிரவ் மோடி டெபாசிட் செய்துள்ளதாகவும், இதனால், அந்த கணக்குகளை முடக்க வேண்டும் என சுவிஸ் அரசுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X