பொது செய்தி

இந்தியா

சர்வரை இங்கே வை: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement
கூகுள்பே, அமேசான்பே, நிறுவனங்கள், கெடு

புதுடில்லி: இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை, உள்நாட்டிலேயே சேமித்து வைக்க வேண்டும் என அமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.



இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றங்கள், குறித்த தகவல்களை, கூகுள் பே, அமேசான் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமித்து வருகின்றன. தகவல்களை, இ ந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கு அந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.


latest tamil news




இந்நிலையில், ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு: பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை இந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும். பணம் அனுப்புபவரின் பெயர், மொபைல் எண், இமெயில், ஆதார் எண், பான் எண், பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் வங்கிக்கணக்கு எண், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல், பணம் அனுப்பும் மற்றும் பெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் தான் சேமித்து வைக்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் சேமித்து வைத்திருந்தால், அந்த தகவல்களை அழித்துவிட்டு, இந்தியாவில் 24 மணி நேரத்திற்குள் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
27-ஜூன்-201918:43:03 IST Report Abuse
venkatan அரசாங்கம்,தனி நபர் யாராக இருந்தாலும் ப்ரைவசியும் பாதுகாப்பும் முக்கியம். மின்னணு முறையில் இது தற்போது சந்தேகத்திற்கு இடமாளிக்கிறது. தனி நபர் சுதந்திரத்தில் மற்றும் பாதுகாப்பில் எதையும் சமரசம் செய்து கொள்ள முடியாது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜூன்-201918:22:50 IST Report Abuse
Girija பேக்அப் சேமிப்பு அல்லது பதிவை கொடுத்தாலும் (சில அறிவு ஜீவிகள் பதில் கருத்தின்படி) அதை பயன்படுத்த அந்த நிறுவனங்களின் ஒத்துழைப்பு, பயிற்சி, சர்வர் கட்டமைப்புகள் போன்றவைகள் தேவைப்படும். இதில் காப்புரிமை சட்டம் போன்ற பல தலையீடுகள் வேறு வரும் . அதனால் பேக் அப் பதிவை வாங்கி அப்படியே ஷெல்ப்பில் வைக்கவேண்டியது தான். தவிர தினமும் கடல் போல் பெருகும் இந்த டாட்டாவில் இருந்து தேவையான சரியான வரை மீறும் தகவல்களை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தனியாக வல்லுநர் குழு அமைக்கவேண்டும் பிக் டாட்டா சயின்டிஸ்ட் போன்று. இந்த நிறுவனங்கள் எல்லாம் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் ஷேர்ட் சர்விஸ் சேவையை பயன்படுத்துவதால் இந்தியாவில் தனியாக சர்வர் அமைத்து செயல்பட முன்வராது அல்லது இந்தியாவில் உள்ள ஷேர்ட் சர்விஸ் சேவைகளை பயன்படுத்த முன்வராது.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
27-ஜூன்-201919:21:24 IST Report Abuse
Balajiகன்சல்டிங் தொழிலா மா மீ க்கு ... அமெரிக்கா டாட்டா இங்கன கொண்டாந்து வெக்க அந்த கோவேர்ந்மேன்ட் உடுமா? இங்கனயே இந்த மாதிரி ஆப் எல்லாம் வந்தாச்சு.. let them go.....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜூன்-201916:33:04 IST Report Abuse
Endrum Indian மிக மிக சரியான உத்தரவு. அப்போது தான் இந்திய ஆளுமையின் கீழ் இந்த தவறான பணப்பரிமாற்றங்கள் உடனே கவனித்து தடுக்கப்படும். இல்லையென்றால் வெளிநாட்டு சர்வர் என்றால் அங்கிருந்து அனுப்புங்கள் இந்த டேட்டாக்களை என்றல் அதை தவிர்த்து அவர்கள் வேறு அனுப்பி இது தான் எங்களிடம் உள்ளது என்று உடான்சு விடமுடியும் குற்றம் செய்தவர்களை தப்புவிப்பதற்காக .
Rate this:
Girija - Chennai,இந்தியா
27-ஜூன்-201920:23:32 IST Report Abuse
Girijaஒரே வழி ஆன் லைன் வர்த்தகம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் தான் செய்யமுடியும் என்று சட்டம் வரவேண்டும், பொருட்கள் பட்டியலிஸ்ட்ப்படவேண்டும் . சாதாரண மளிகை சாமான் வாங்குபவர் விவரம் எதற்கு இந்தியாவிற்கு வெளியே செல்லவேண்டும் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X