சர்வரை இங்கே வை: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை| Payment data should be stored in systems located in India: RBI | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்வரை இங்கே வை: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (29)
Share
கூகுள்பே, அமேசான்பே, நிறுவனங்கள், கெடு

புதுடில்லி: இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை, உள்நாட்டிலேயே சேமித்து வைக்க வேண்டும் என அமேசான் பே, கூகுள் பே நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.



இந்தியாவில் நடக்கும் பணப்பரிமாற்றங்கள், குறித்த தகவல்களை, கூகுள் பே, அமேசான் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமித்து வருகின்றன. தகவல்களை, இ ந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதற்கு அந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.


latest tamil news




இந்நிலையில், ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு: பணப்பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை இந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும். பணம் அனுப்புபவரின் பெயர், மொபைல் எண், இமெயில், ஆதார் எண், பான் எண், பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் வங்கிக்கணக்கு எண், ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல், பணம் அனுப்பும் மற்றும் பெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் தான் சேமித்து வைக்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் சேமித்து வைத்திருந்தால், அந்த தகவல்களை அழித்துவிட்டு, இந்தியாவில் 24 மணி நேரத்திற்குள் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X