பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர் இல்லை

Updated : ஜூன் 27, 2019 | Added : ஜூன் 27, 2019 | கருத்துகள் (8)
Advertisement
தமிழகம், நிலத்தடிநீர், மத்திய அரசு, லோக்சபா

புதுடில்லி: தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக வற்றிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.


தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்த பதில்: தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறித்து 2008 - 17 காலகட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 358 தாலுகாவில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது. 195 இடங்களில் அபாயகரமானதாக உள்ளது. 35 இடங்களில் முழுமையாக உப்புநீர் சேர்ந்து நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
27-ஜூன்-201921:14:37 IST Report Abuse
Ray தமிழ்நாட்டில் 232 தாலுக்காக்கள் உள்ளதாக வெப் சைட்டில் உள்ளது ஆனால் தமிழகத்தில் 358 தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் முழுமையாக வற்றிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.எப்படி?
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201919:25:45 IST Report Abuse
Rajagopal ஐம்பது ஆண்டுகளாக செய்தப் பாவங்களின் விளைவு இப்போது ஆரம்பித்திருக்கிறது. தமிழக மக்கள்தான் இந்த மாதிரித் தலைவர்களுக்கு ஓட்டுப் போட்டுப் பதவியில் அமர்த்தினார்கள். காமராஜரைப் புறக்கணித்து, திராவிடக் கட்சிகளை நம்பி மோசம் போனார்கள். இப்போது மணல் கூட மிஞ்சவில்லை. மக்களே ஊழலில் மூழ்கி விட்டார்கள். பணம் வாங்கி ஓட்டுப் போடுகிறார்கள். பஞ்சம்தான் வரும். அகதிகளாக மற்ற மாநிலங்களுக்கு குடி பெயரும் நிலைமை வரத் தான் போகிறது. இப்போது ஆரம்பித்ததால், இந்த நிலையிலிருந்து மீண்டு வர இன்னும் நூறாண்டுகளுக்கு மேல் ஆகும். அத்தனை அளவுக்கு சேதம் ஆகிஇருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
27-ஜூன்-201916:24:46 IST Report Abuse
ஆரூர் ரங் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குப் போனபின்பும் போர்வெல்களுக்கு கட்டுப்பாடு இல்லை எத்தனை ஆழத்துக்கும் தோண்டலாம். இலவச மோட்டார் இலவச மின்சாரம் மூலம் மூணுபோகம் விவசாயம் செய்யலாம் ? உப்புநீர் வந்தாலும் விடமாட்டோம் வாழ்க விவசாயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X