பதிவு செய்த நாள் :
மன்மோகன் சிங்கை சந்தித்தார் நிர்மலா சீதாரமன்

புதுடில்லி: தன் முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாரமன், 59, பொருளாதார நிபுணரும், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங்கை, 86, நேற்று சந்தித்தார்.

மன்மோகன் சிங்,நிர்மலா,மன்மோகன்,நிர்மலா சீதாராமன்,சந்திப்பு


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் ஆட்சி அமைத்து

உள்ளது. கடந்த முறை, ராணுவ அமைச்சராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரான, நிர்மலா சீதாராமன், தற்போது நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டு உள்ளார்.

நாட்டின் முதல் பெண் மத்திய நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன், காங்.,கின் முன்னாள் பிரதமர் இந்திரா, நிதி அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது, பார்லி., கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஜூலை, 5ல்,தன் முதல் மத்திய பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.


இந்நிலையில், பொருளாதார நிபுணரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங்கை, அவருடைய இல்லத்தில், நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து

Advertisement

பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ராஜ்யசபா, எம்.பி., யாக இருந்த,மன்மோகன் சிங் பதவி காலம், சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதனால், பட்ஜெட் தாக்கலின் போது, அவர் சபையில் இருக்க மாட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
28-ஜூன்-201921:39:19 IST Report Abuse

Selva மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிர்மலா சீதாரமன் சந்தித்த மன்மோகன் சிங்க் பலரும் பாராட்டும் பொருளாதார மேதை...மேலும் . மோடியும் நிர்மலாவும் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு இந்திய அரசியலில் ஒரு நாகரிகமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்....வாழ்க வளர்க...

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
28-ஜூன்-201911:39:00 IST Report Abuse

தமிழ் மைந்தன்நல்ல முயற்சி.....மன்மோகன் அப்படியே தனது ஆட்சியில் நடத்த ஊழல்கள் அனைத்தையும் சொல்லிவிட்டால்கூட நாட்டுக்கு மிகப்பெரிய உதவி...தனது 10 ஆண்டுகால பிரதமர் பதவியிலிருந்து செய்ய முடியாததை சாதாரண இந்திய குடிமகனாக இருந்து செய்ததாக வரலாறு பேசும்........செய்வாரா?......இந்த சாதனை நாயகன்.....

Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
28-ஜூன்-201913:18:34 IST Report Abuse

Yezdi K Damoபேஷ் பேஷ் அதுக்கென்ன இப்போ ஜமாட்சிபுடலாம் . அப்படியே நம்ம நீரவ் மோடி , மெஹுல் சோக்சி அண்ணாச்சி எல்லாம் எப்படி பத்திரமா அனுப்பி வச்சாங்க என்ற ராணுவ ரகசியத்தையும் சொல்லிடாங்கன்னா ரொம்ப நன்னா இருக்கும் . ...

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
28-ஜூன்-201914:51:18 IST Report Abuse

Chowkidar NandaIndiaஅதனாலென்ன. நிலக்கரி துறையை தன்வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கீழ் இருந்த அலுவலர்களை மட்டும் கைது செய்து கனகச்சிதமாக கண்துடைப்பு நடத்தியது எப்படின்னு ஒரு விளக்கம் கொடுத்துடீங்கன்னா சந்தோஷப்படுவாரே. அதோடு குடும்பத்தோடு ஜாமீனில் இருந்து கொண்டே அடுத்தவரை திருடன் என்று சொல்வது எப்படி என்று விளக்கம் கொடுத்தால் அதிருமே. ரைட்டா நைனா ...

Rate this:
Annamalai Nagappa - CHENNAI,இந்தியா
28-ஜூன்-201910:09:12 IST Report Abuse

Annamalai Nagappaமன்மோகன் சிங்க் உலகமே பாராட்டும் பொருளாதார மேதை. மோடியும் நிர்மலாவும் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு இந்திய அரசியலில் ஒரு நாகரிகமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். நம் நாடு முன்னேற இது முதல் படியாக இருக்கட்டும்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X