சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பிட்சா டெலிவரிக்கு தானோட்டிகள்

Added : ஜூன் 28, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பிட்சா டெலிவரிக்கு தானோட்டிகள்

தானோட்டி சரக்குப் பெட்டிகளுக்கு அவசர தேவை இருப்பதாக கருத்துகிறது, 'நியூரோ!' ஆட்களை பயன்படுத்தாமல், தங்கள், 'பிட்சா'வை வாடிக்கையாளரின் முகவரிக்கே டெலிவரி செய்ய முடியுமா என்று பல பரிசோதனை செய்து வருகின்றனர், டோமினோஸ் பிட்சாவின் அதிகாரிகள்.

இந்த தேவையை, குட்டி சைசில் இருக்கும் நியூரோவின், 'ஆர்ட்டூ' என்ற தானோட்டி சரக்குப் பெட்டிகளால் கச்சிதமாக செய்ய முடியும். ஏனெனில், உணவு, மளிகை பொருட்களை தானே எடுத்துச் சென்று தரும் வாகனங்கள மட்டுமே தயாரிக்கிறது நியூரோ.

சமீபத்தில், அமெரிக்காவின், ஹியூஸ்டன் நகரில், சில டோமினோஸ் கடைகளிலிருந்து ஆர்ட்டூ தானோட்டி பெட்டிகள், பிட்சாக்களை டெலிவரி செய்ய ஆரம்பித்து உள்ளன. வாடிக்கையாளர் ஒரு மொபைல் செயலி மூலம் ஆர்டர் செய்தால், அவரது முகவரி பதித்த பெட்டியை சுமந்து, ஆர்ட்டூ சரக்குப் பெட்டி தானே கொண்டு போய், வீட்டின் முன் நின்று கொள்கிறது.

வாடிக்கையாளர் வந்து, தன் செயலியை சொடுக்கினால், பெட்டியின் கதவு திறக்கும். தனக்கான பிட்சாவை எடுத்ததும் கிளம்பி, அடுத்த ஆர்டரை டெலிவரி செய்ய கிளம்பிவிடுகிறது ஆர்ட்டூ.

பாதுகாப்பாக, அதிக எடையுள்ள பொருட்களை வேகமாக கொண்டு செல்ல, ஆர்ட்டூ போன்ற தீர்வு தான் சரியானது என, நியூரோ அதிகாரிகள் சொல்கின்றனர். வாடிக்கையாளர்களும் அப்படி நினைத்தால், விரைவில் சாலைகளில், ஆர்ட்டூ சரக்கு வண்டிகளில் டோமினோஸ் பிட்சா மணக்க ஆரம்பித்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-201909:19:22 IST Report Abuse
Raj தானியங்கி என்ற நல்ல தமிழ் வார்த்தை இருக்கும்போது ஏன் "தானொட்டி" என்ற புதிய வார்த்தை உபயோகப்படுத்துகிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
28-ஜூன்-201918:01:15 IST Report Abuse
Subramanian Sundararaman இங்கே ஆர்ட்டு சரக்கு (அதாங்க டாஸ்மாக் ) எடுத்து செல்ல பயன் படுத்தலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X