கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சபாஷ்! ஹெல்மெட் விவகாரத்தில்  ஐகோர்ட் அதிரடி

சென்னை:'ஹெல்மெட்' விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணியாமல் செல்வோரை கண்டுகொள்ளாத போலீசார் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, காவல் துறை தலைமைக்கு உத்தரவிட்டு உள்ளது. உயிர் பலிகளை தடுக்க, சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்என்றும், அரசுக்கு, நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த, ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'இரு சக்கர வாகனங் களில் செல்பவர்கள், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால், ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.

விழிப்புணர்வு
'சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது.அப்போது, 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர், கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; ஹெல்மெட்டின் அவசியம் குறித்தும், விதிகள் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்த

வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அணிவதில்லை

அதைத்தொடர்ந்து, இவ்வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள், 'இரு சக்கர வாகனங்களில், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரில் எவரும், ஹெல்மெட் அணிவது இல்லை.'ஹெல்மெட் அணியாமல் ஓட்டு வோரின் உரிமங்களை, ஏன் ரத்து செய்யக் கூடாது; அவர்களின்வாகனங்களை, ஏன் பறிமுதல் செய்யக் கூடாது' என, கேள்விகள் எழுப்பினர்.ஹெல்மெட் விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய, ஏற்கனவே, உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை, கண்டிப்புடன், அதிகாரிகள் பின்பற்றும் படியும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இருசக்கர வாகன விபத்துக்களில், தலையில் காயம்பட்டு,

இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.'பின்னால் அமர்ந்து செல்பவர்கள், ஹெல்மெட் அணிவது இல்லை; அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களில் 100சதவீதம் பேர், ஹெல்மெட் அணிவது இல்லை என்றால், 100 சதவீத வழக்குகள் ஏன் பதிவாகவில்லை; சென்னை, கடற்கரை சாலையில் வரும்போது,


இரண்டு போலீசார், சாலை ஓரம் அமர்ந்து, வேடிக்கை பார்ப்பதை காண முடிந்தது. ஹெல்மெட் அணியாமல், வாகனங்களில் செல்பவர்களை பிடிக்கக் கூடாது என, உயர் அதிகாரிகள் யாராவது உத்தரவு பிறப்பித்துள்ளனரா; எடப்பாடி தொகுதியில், ஹெல்மெட் அணியாமல் சென்ற, போலீசார் இருவர், விபத்தில் சிக்கிய செய்தி, வேதனை அளிக்கிறது.

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஹெல்மெட் அணிவதை, போலீசார் உறுதி செய்ய வேண்டும். மோட்டார் வாகன சட்டம், விதிகள், நீதிமன்ற உத்தரவுகள் கண்டிப்புடன் அமல் படுத்துவதை, போலீஸ் கமிஷனரும் உறுதி செய்ய வேண்டும்.ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்படும் அறிக்கை, திருப்தியாக இல்லை என்றால், நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கில் அடுத்த விசாரணையை, ஜூலை, 5க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
05-ஜூலை-201918:44:01 IST Report Abuse

G.Krishnanஹெல்மெட் அணியாதவர்களை தண்டியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. . . .ஐயோ பாவம் மக்களின் மேல் கோர்ட்க்கு இவ்வளவு அக்கறையா? . . . . . ""உடம்பு புல் அரிக்குது"" சாராயம் குடித்து சாகும் மக்கள் எத்தனை பேர் . . . . . . . .அதை விற்பது யார்? . . . . .சாராயம் குடித்து சாவதை விட,. . . . . அந்த குடிப்பழக்கத்தினால் எத்தனை குடும்பங்கள் நாசமாக போய்க்கொண்டிருக்கிறது. . . . அடுத்த சந்ததியினரே குடிப்பழக்கத்துக்கு ஆளாக நேரிடுகிறதே? . . . . இதற்ககு அந்த நீதிபதி என்ன பத்தி சொல்லுவார் . . . . . . ஊர்ல சொல்லுவாங்க """கேனப்பய ஊர்ல கிருக்குப்பயா நாட்டாண்மை""" அந்த மாதிரி இருக்கு.

Rate this:
Ramachandran Seshadri - Chennai,இந்தியா
29-ஜூன்-201923:53:52 IST Report Abuse

Ramachandran SeshadriWhen there is a law/order everyone should obey. Courts offen try to play their role sometimes seriously, but many a time playing to the gallery on sensational stuff. But The Courts Need to "KEEP THEIR HOUSE IN ORDER FIRST". They hardly work for 190/365 in a year. Even during the 190 days many a court don't work sitting Judges transfer, lawyers strike etc., Being an indepent body managed by their collegium their accountability is pathetic. The "Tip of the Iceberg ( Himalayas?) is the case of Sri Nambi Narayanan of ISRO. By this delay their Patriotism become circumspect and also exposed their insensitive approach towards an innocent proclaimed by them after 20 Long Years. What is preventing the collegium to PROMULGATE MANDATORY NORMS for cases to be finalised within 3 years. They cannot escape sitting " huge lot of ping cases" as at least 50% of the cases might lack admissible norms. This can be judged by the Single judge's judgement in the Sri Sabarimala case. The Growth of Bharath and Upliftment of the poor are burdened by the courts- one of the Primary constitutional body. Who to bell the cat.

Rate this:
29-ஜூன்-201919:59:38 IST Report Abuse

Mohanraj Arumugamennoda brother ipadi than Police nalathan death aei dan...

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X