பன்னீரின் பாசம்

Added : ஜூன் 29, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பன்னீரின் பாசம்

பன்னீரின் பாசம்

தமிழகத்தின் துணை முதல்வர், பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி, அ.தி.மு.க., - எம்.பி.,யுமான ரவீந்திரநாத், லோக்சபாவில், தமிழக பிரச்னைகளை எழுப்பி அசத்தி வருகிறார். அ.தி.மு.க.,வின் ஒரே, எம்.பி., என்பதால், இவருக்கு அடிக்கடி பேச வாய்ப்பு கிடைக்கிறது.மகன் லோக்சபாவில் எப்படி பேசுகிறார்; அவருடைய பேச்சு குறித்து, மற்ற கட்சியினர் என்ன நினைக்கின்றனர் என்பதையெல்லாம், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடம், போன் போட்டு விசாரித்து வருகிறார் பன்னீர்.'அண்ணே, தம்பி அருமையாக பேசினார். முதல் பேச்சே பிரமாதம். பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட, மற்ற கட்சி, எம்.பி.,க்களும், தம்பியின் பேச்சைப் பாராட்டினர்' என, பன்னீருக்கு பதில் சொல்கின்றனர், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.'நீங்கள் விஷயம் தெரிந்தவர்கள்; பல முறை, எம்.பி.,யாக இருந்தவர்கள்; தம்பியை கவனித்துக் கொள்ளுங்கள்' என, அவர்களிடம் உருகி கேட்டுக் கொண்டாராம் பன்னீர்.

கதை எழுதும், பா.ஜ., - எம்.பி.,

மத்திய டில்லி தொகுதியின், பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பவர் மீனாட்சி லேகி. இரண்டாவது முறை, எம்.பி.,யாகியுள்ளார். இவருடைய கணவர், மத்திய அரசு வழக்கறிஞர். மீனாட்சி, 2014ல், முதல் முறையாக, எம்.பி., ஆன போதே, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தார்; ஆனால், கிடைக்கவில்லை.இந்த முறை, கட்சி இவருக்கு, 'சீட்' கொடுக்காது என, சொல்லப்பட்டது. இந்நிலையில், 'ரபேல்' போர் விமான விவகாரத்தில், ராகுலுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் மீனாட்சி. இந்த வழக்கில், ராகுல் மன்னிப்பு கேட்க நேரிட்டது.இதன் விளைவாக, மீனாட்சிக்கு சீட் கிடைத்து, வெற்றி பெற்று, எம்.பி.,யும் ஆகிவிட்டார். இந்த முறை, கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைத்து விடும் என எதிர்பார்த்தவருக்கு, ஏமாற்றம் தான் மிச்சம்.வெறுத்துப் போனவர், 'க்ரைம் திரில்லர்' நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். 'நியு டில்லி கான்ஸ்பிரஸி' என்ற தலைப்பில், பார்லிமென்ட் அதிகாரி ஒருவருடன் சேர்ந்து, அதை எழுதியுள்ளாராம் மீனாட்சி. ஜூலையில் இந்த நாவல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கதை எழுதுவதால் மீனாட்சிக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்கின்றனர், சக பா.ஜ., - எம்.பி.,க்கள். 'மக்களுக்கு சேவை செய்யுங்கள்; உங்களுடைய தொகுதியை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என, எம்.பி.,க்களுக்கு, பிரதமர் மோடி, 'அட்வைஸ்' செய்து வருகிறார். 'அதை செய்வதை விட்டு விட்டு, இப்படி கதை எழுதுவது, மோடிக்கு சுத்தமாகப் பிடிக்காது; அப்படியே எழுதினாலும், சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்களைப் பற்றி எழுதினால், மோடி வரவேற்பார்' என, சிரிக்கின்றனர் அந்த, பா.ஜ., - எம்.பி.,க்கள்.

புலம்பும், தி.மு.க., - எம்.பி.,க்கள்

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று, வட மாநிலங்களிலிருந்து கிளம்பிய மோடி, 'சுனாமி'க்கு, இங்கே அணை போட்டது. போட்டியிட்ட, 38 இடங்களில், தி.மு.க., கூட்டணி, 37 இடங்களை கைப்பற்றியது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த குற்றச்சாட்டில், வேலுார் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போது, தி.மு.க.,வின், 20 எம்.பி.,க்கள், லோக்சபா நடவடிக்கைகளில் மகிழ்ச்சியாக பங்கேற்று வருகின்றனர். ஆனாலும், அவர்களில் பெரும்பாலானோர், சபையில் பேச முடியவில்லையே என, நொந்து போயுள்ளனர்.பலருக்கு பேச திறமையிருந்தும், 'ஒரு ஆண்டு வெறுமனே சபையில் என்ன நடக்கிறது என கவனியுங்கள்; பிறகு பேசலாம்' என, தி.மு.க., தலைமை, அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாம். சீனியர், எம்.பி.,க்கள் நான்கு பேர் மட்டுமே, சபையில் பிரச்னைகளை பற்றி பேசுகின்றனர்.தி.மு.க., - எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து, தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மனு கொடுக்கலாம் என்றால், அதற்கும் தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. கட்சித் தலைமைக்கு சொல்லாமல், யாரையும் சந்திக்கக் கூடாது என, மேலிடத்து கட்டளையாம். பிரமாண்ட வெற்றி பெற்றும், லோக்சபாவில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என புலம்புகின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர்.டில்லியில் பெண் நிருபர்கள் சங்கம் உள்ளது. இவர்களுடைய சங்க நிகழ்ச்சிக்கு, தி.மு.க.,வின் இரண்டு பெண், எம்.பி.,க்களுக்கும் அழைப்பு வந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என, பார்லிமென்ட், தி.மு.க., தலைவர் சொன்னதால், இந்த இரண்டு, எம்.பி.,க்களும் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan - singapore,சிங்கப்பூர்
16-ஜூலை-201910:57:51 IST Report Abuse
karthikeyan சுடலை எப்படி அனுமதிப்பான் ? உங்களை விற்க / பேரம் பேச நாள் பார்த்துக்கொண்டு இருக்கிறார் . சந்தர்ப்பம் அமைய வாய்ப்பில்லை என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பார். 5 ஆண்டுகள் தனி பெரும்பான்மை யில் ஒட்டி விடுவார் நமது ஆதரவு தேவை இல்லை . எப்படி விற்கலாம் அல்லது வேறு ஏதும் ஒப்பந்தம் போட்டு காசு பார்க்கலாமா என்று இருப்பார்
Rate this:
Share this comment
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
01-ஜூலை-201920:15:08 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI அதிமுக ஒரேயொரு புதிய MP தூள் கிளப்பறாரு திமுக +கூட்டணி 37 தண்டம் இவர்களால் எந்தவித நன்மையும் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X