பதிவு செய்த நாள் :
கித்னா அச்சா ஹே மோடி! ஆஸி., பிரதமர் புகழாரம்

டோக்கியோ:ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்திய பிரதமர் மோடியுடன், 'செல்பி' எடுத்து, 'கித்னா அச்சா ஹே மோடி! (எவ்வளவு இனிமையானவர் மோடி) என, ட்விட்டரில் புகழாரம் சூடியுள்ளார்.

 கித்னா அச்சா ஹே, மோடி! ,ஆஸி., பிரதமர், புகழாரம்சமூக வலைதளங்களின் தாக்கத்தால், இப்போது, 'செல்பி' மோகம் அதிகரித்துள்ளது. புதிய இடங்களுக்கு சென்றாலோ, பழைய நண்பர்களை சந்தித்தாலோ, 'செல்பி' படம் எடுத்து, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்

என, 'சுடச்சுட' பதிவு செய்து விடுகின்றனர். இந்த, 'செல்பி' மோகம் ஆஸ்திரேலிய பிரதமரான ஸ்காட் மோரிசனையும் விட்டு வைக்கவில்லை.


ஜப்பான் நாட்டில் ஒசாகாவில் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்தார். அதில், ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதமர் ஸ்காட் மோரிசனும் ஒருவர். மோடியை பார்த்த அவர்,சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் பேசி விட்டு, மோடியுடன் தனது மொபைல் போனில் செல்பி எடுத்துள்ளார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில், ''கித்னா அச்சா ஹே மோடி!'' என்ற ஹிந்திமொழியில் படத்தைபகிர்ந்துள்ளார்.


கடந்த மாதம், மோடி, மோரிசன் இருவரும் தேர்தல் வெற்றிக்கு மாறி, மாறி வாழ்த்து தெரிவித்து, 'இணைந்து செயல்படுவோம்' என உறுதி அளித்து இருந்தனர்.தற்போது மோடியை நேரில் சந்தித்த போது, அவரது செயல்பாடுகளில் மிகுந்த மகிழ்ச்சி

Advertisement

அடைந்த மோரிசன், ''எவ்வளவு இனிமையான வர் மோடி,'' என்ற பொருளில், ஹிந்தி வாக்கியத்தை ஆங்கிலத்தில், 'டைப்' செய்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


இதற்கு, ''நண்பரே, இந்தியா - ஆஸ்திரேலிய உறவுகள் தரும் உத்வேகத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்,'' என பிரதமர் மோடி பதில் ட்விட் செய்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூன்-201915:12:32 IST Report Abuse

Pugazh V. Thank you for giving an opportunity to explain. Thanks again.

Rate this:
30-ஜூன்-201913:18:35 IST Report Abuse

த. மோகன சுந்தரம்ஏன்டா ஃப்ளக்ஸா அடிச்சு தள்ளுறீங்க.. வித விதமாக போஸ் குடுக்குறீங்க.. மோடி செல்பி ன்னா மட்டும் இவ்வளவு செல்ஃபிஷா கருத்து வாந்தி எடுக்கறீங்க... இதுல கருத்து சுதந்திரம் இல்லைன்னு கூப்பாடு வேற....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூன்-201910:44:51 IST Report Abuse

Pugazh VWhen I visited Dubai, officially, the immigration officer smiled n told me, "vanakkam" .. Also the CEO of the company, I visited too shook my hands n days, "vaango". What is there to be excited about this?

Rate this:
Chitra - Chennai,இந்தியா
30-ஜூன்-201913:39:21 IST Report Abuse

Chitra@Pugazh. வருபவர்களை எல்லாம் வரவேற்பதற்கு சம்பளம் பெறும் இமிக்ரேஷன் ஆபிசரும், நீங்களாகவே போய் ஒரு கம்பெனி தலைவருடன் கை குலுக்குவதும், உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தேர்வான பிரதமருடன் மற்றொரு வளர்ந்த நாட்டின் பிரதமர் தானே ஆர்வத்துடன் selfie எடுத்துக் கொண்டு அதை தனது ட்விட்டர் பக்கத்தில் போடுவதும், அதை உலக மீடியாக்கள் பரபரப்பாக ஒளிபரப்புவதும் ஒன்று என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு நீங்கள் பெரிய அப்பாடக்கர் என்ற megalomania illusion உள்ளது. ஹா ஹா.. ...

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
30-ஜூன்-201917:37:26 IST Report Abuse

Sathish அது எந்த கம்பெனி? அட்ரஸ் குடுங்க. நானும் வேலைக்கு சேந்துக்கறேன். ...

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
04-ஜூலை-201901:40:49 IST Report Abuse

Sathish குடுக்க மாடீங்களே. எங்க இன்னோரு தமிழனுக்கு வாய்ப்பு கொடுத்தா நமக்கு ஆப்படிச்சிருவான்னு பயம். நீங்க மட்டும் நல்லா இருங்க. ...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X