புலம்பும் தி.மு.க., எம்.பி.,க்கள்

Updated : ஜூன் 30, 2019 | Added : ஜூன் 30, 2019 | கருத்துகள் (74)
Advertisement
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

புதுடில்லி: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று, வட மாநிலங்களிலிருந்து கிளம்பிய மோடி 'சுனாமி'க்கு, இங்கே அணை போட்டது. போட்டியிட்ட, 38 இடங்களில், தி.மு.க., கூட்டணி, 37 இடங்களை கைப்பற்றியது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த குற்றச்சாட்டில், வேலூர் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.






கட்டுப்படுத்தும் தலைமை

இப்போது, தி.மு.க.,வின், 20 எம்.பி.,க்கள், லோக்சபா நடவடிக்கைகளில் மகிழ்ச்சியாக பங்கேற்று வருகின்றனர். ஆனாலும், அவர்களில் பெ ரும்பாலானோர், சபையில் பேச முடியவில்லையே என, நொந்து போயுள்ளனர். பலருக்கு பேச திறமையிருந்தும், 'ஒரு ஆண்டு வெறுமனே சபையில் என்ன நடக்கிறது என கவனியுங்கள்; பிறகு பேசலாம்' என, தி.மு.க., தலைமை , அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாம். சீனியர், எம்.பி.,க்கள் நான்கு பேர் மட்டுமே , சபையில் பிரச்னைகளை பற்றி பேசுகின்றனர். தி.மு.க., - எம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து, தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மனு கொடுக்கலாம் என்றால், அதற்கும் தடை உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. கட்சித்தலைமைக்கு சொல்லாமல், யாரையும் சந்திக்கக் கூடாது என, மேலிடத்து கட்டளையாம்.

பிரமாண்ட வெற்றி பெற்றும், லோக்சபாவில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லையே என புலம்புகின்றனர், தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர். டில்லியில் பெண் நிருபர்கள் சங்கம் உள்ளது. இவர்களுடைய சங்க நிகழ்ச்சிக்கு, தி.மு.க.,வின் இரண்டு பெண், எம்.பி.,க்களுக்கும் அழைப்பு வந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என, பார்லிமென்ட், தி.மு.க., தலைவர் சொன்னதால், இந்த இரண்டு,எம்.பி.,க்களும் பங்கேற்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
03-ஜூலை-201911:06:59 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எம் பி ஆனது காசுசேர்க்கவேதான் எவனுக்கும் தேசப்பற்றுமில்லே நலனில் அக்கறையும் இல்லே வோட்டுப்போட்டாங்க திமுகவுக்கு அவங்களேதான் அசிங்கம் பிடிச்ச கேவலம்கள்
Rate this:
Share this comment
Cancel
Balaji Gopalan - Asmara,எரிட்ரியா
03-ஜூலை-201900:32:55 IST Report Abuse
Balaji Gopalan நாடாளுமன்ற திமுக தலைவர் பாலு, நதிகள் பற்றி பேசும் போது திணறுகிறார் .. இவ்ளோ வருஷம் அனுபவம் இருந்தும் தமிழ்நாட்டின் நதிகள் பெயர் கூட அவருக்கு தெரியல .. இவங்க எல்லாம் மத்திய அமைச்சர் ஆக இருந்தவங்க .. டோல் கேட் வசூல் அதிகம் பாலுவிற்கு ..எல்லாம் தமிழ் நாட்டின் தலை விதி ..
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
30-ஜூன்-201921:37:57 IST Report Abuse
Anandan என்ன இருந்தாலும் நம்ம அதிமுக உறுப்பினர்கள் போல வருமா. பாட்டு பாடுறது, கட்சி தலைவரின் புகழ் பாடுறதுனு என்னமா தீயாய் பாராளுமன்றத்தில் இருந்தாங்க இவங்களும் இருக்காங்களே. சகிக்கலை.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
04-ஜூலை-201911:22:20 IST Report Abuse
madhavan rajanஅப்போ உட்கட்சி ஜனநாயகம் திமுகவில் அதிகமோ? ஒட்டு வாங்குவதற்கு காசு பேசியது. இப்போது இவர்கள் பேசாமல் இருந்து காசு வாங்கிக்கொண்டு வந்து விட வேண்டும் என்று கட்சி நினைக்கிறதோ என்னவோ? அதில்லாமல் இவர்கள் ஏதாவது உளறி அதை ஊடகங்கள் இவர்களுடைய முந்நாளைய செயல்பாட்டை அடிக்கடி வெளிக்கொணர நேர்ந்தால் தமிழ் நாட்டு தேர்தலில் பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. சுடலையை பல சமயங்களில் மேடையில் உளறுகிறார் - சுதந்திர தினம், குடியரசு தினத்தில் குளறுபடி - அடுத்த நிலை தலைவர்களை பற்றி கேட்கவா வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X