அஜித் வாக்கு கொடுத்தார் நடித்து முடித்தார் : போனி கபூர்

Added : ஜூன் 30, 2019 | கருத்துகள் (1)
Advertisement
நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் என்ற அறிமுகத்துடன் தயாரிப்பாளராக பாலிவுட்டில் பளிச்சிட்ட போனிகபூர் இப்போது கோலிவுட்டில் அஜித் நடிக்கும், இயக்குனர் வினோத் இயக்கும் 'நேர் கொண்ட பார்வை' படம் தயாரிப்பது குறித்து தினமலர் 'சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக மனம் திறக்கிறார்...* உங்கள் திரைப் பயண அனுபவம் குறித்து?1976, 77 ல் ஹிந்தி சினிமாவுக்கு வந்தேன். 79 ல் தயாரிப்பில் ஆர்வம் காட்டிய
அஜித் வாக்கு கொடுத்தார் நடித்து முடித்தார் : போனி கபூர்

நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் என்ற அறிமுகத்துடன் தயாரிப்பாளராக பாலிவுட்டில் பளிச்சிட்ட போனிகபூர் இப்போது கோலிவுட்டில் அஜித் நடிக்கும், இயக்குனர் வினோத் இயக்கும் 'நேர் கொண்ட பார்வை' படம் தயாரிப்பது குறித்து தினமலர் 'சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக மனம் திறக்கிறார்...
* உங்கள் திரைப் பயண அனுபவம் குறித்து?1976, 77 ல் ஹிந்தி சினிமாவுக்கு வந்தேன். 79 ல் தயாரிப்பில் ஆர்வம் காட்டிய நான் ஆரம்பத்தில் எடிட்டராகவும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் வேலை பார்த்தேன். 1979 ல் என் அப்பாவின் தயாரிப்பில் கவனம் செலுத்தினேன்.
* அஜித் அறிமுகம் கிடைத்தது எப்படி?நாங்கள் சென்னை வந்தாலும், அஜித் மும்பை வந்தாலும் குடும்பத்துடன் சந்திப்பது வழக்கம். ஸ்ரீதேவியுடன் அஜித் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'ல் நடித்த பின் எங்களுக்குள் நட்பு உருவானது. அப்போது தான் அவரிடம் படம் தயாரிப்பு குறித்து பேசினோம். ஒருநாள் மும்பையில் டின்னர் சாப்பிட்ட போது எங்கள் படத்தில் நடிக்க கமிட் ஆனார். வாக்கு கொடுத்தது போல் நடித்தும் முடித்தார். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் அஜித்துக்கு நிகர் அஜித் தான்.
* 'நேர் கொண்ட பார்வை' அனுபவம் ?இந்த படம் எனக்கும், படக் குழுவினருக்கும் சந்தோஷமான அனுபவத்தை கொடுத்தது. அஜித் என்ற நல்ல மனிதர், நல்ல நடிகரை வைத்து படம் தயாரித்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். வினோத் இயக்குனராக கிடைத்தது மகிழ்ச்சி. வித்யா பாலன், கல்கி, ஸ்ரத்தா என அவரவர் கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
* ஹிந்தியில் வெளியான 'பிங்க்' கதை தேர்வு ?'நான் நிறைய படங்கள் பண்ணிட்டேன். சமூகத்திற்கு தேவையான, பெண்களை மதிக்கும் படம் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன்' எனக் கூறிய அஜித் தான் 'பிங்க்' கதையை தேர்வு செய்தார்.
* ஹிந்தி 'பிங்க்', தமிழ் 'நேர்கொண்ட பார்வை'?கதை கருவில் மாற்றம் இல்லை. 'பிங்க்' ல் அமிதாப் பச்சன் 75 வயது 'அல்சைமர்' நோயாளியாக நடித்தார். ஆனால், தமிழில் 47 வயதான அஜித், அதே வயது வழக்கறிஞராக நடித்துள்ளார். தமிழில் அஜித் ரசிகர்களுக்காக இரண்டு சண்டைக் காட்சிகளை வைத்துள்ளோம்.
* படத்தில் எத்தனை பாடல்கள் ?யுவன் ஷங்கர் ராஜா இசையில் 4 பாடல்கள் உள்ளன. அஜித்தின் 'மங்காத்தா', 'பில்லா' விற்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். 'நேர்கொண்ட பார்வை' யிலும் ஹிட் கூட்டணி தொடரும். 'மங்காத்தா', 'பில்லா' வில் தீம் மியூசிக் பிரபலமானது. இந்த படத்திலும் பிரபலமாகும் அளவிற்கு தீம் மியூசிக் உள்ளது.
* அஜித் கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் ?தயாரிப்பாளர் மட்டும் இல்லை, யாராக இருந்தாலும் அவர் செலுத்தும் மரியாதை, அன்பு, பழகும் விதம், உதவி செய்யும் மனம் அஜித்திடம் மிகவும் பிடித்த அம்சங்கள்.
* தமிழில் ஸ்ரீ தேவி நடித்ததில் பிடித்தது ?'மூன்றாம் பிறை', 'மீண்டும் கோகிலா', 'சிகப்பு ரோஜாக்கள்', 'கல்யாணராமன்', 'மூன்று முடிச்சு'.
* உங்கள் தயாரிப்பில் அடுத்த படத்திலும் அஜித் ?ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கும் படத்தை வினோத்தான் இயக்குகிறார். பாரிசில் 'லொக்கேஷன்' பார்த்து கொண்டிருக்கிறோம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Bandar Seri Begawan,புருனே
07-ஜூலை-201907:16:38 IST Report Abuse
Murugan தமிழில் அஜித் ரசிகர்களுக்காக இரண்டு சண்டைக் காட்சிகளை வைத்துள்ளோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X