சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச படம் வெளியிட்ட கள்ளக்காதலன்

Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
 ஆபாச படம் வெளியிட்ட கள்ளக்காதலன்

பெரம்பலுார்:உல்லாசமாக இருந்த படத்தை, 'வாட்ஸ் ஆப்'பில் கள்ளக்காதலன் வெளியிட்டதால், விரக்தியடைந்த இளம்பெண், விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.அரியலுார், நம்மங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி, 35; சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 27. எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தை இல்லை.சுடர்மணியுடன், கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்ப்பவன், இதே கிராமத்தைச் சேர்ந்த, சரவணன், 30. திருமணமாகி, மூன்று பிள்ளைகள் உள்ள சரவணனுக்கும், சங்கீதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது, சுடர்மணிக்கு தெரியவர, கணவரை பிரிந்த சங்கீதா, ஒரு ஆண்டாக, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
அங்குள்ள கரும்பு காட்டில், சரவணனும், சங்கீதாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை, போட்டோ எடுத்து வைத்திருந்த சரவணன், தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என, அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளான்.சங்கீதா மறுக்கவே, அவருடன் தனிமையில் இருக்கும் போட்டோவை, சங்கீதாவின் உறவினரான அறிவழகன் என்பவருக்கு, 19ம் தேதி, 'வாட்ஸ் ஆப்'பில், சரவணன் அனுப்பியதாக கூறப்படுகிறது.இதனால், அதிர்ச்சியடைந்த சங்கீதா, தன் தாய் காந்தியுடன், 19ம் தேதி எலி பேஸ்டை சாப்பிட்டார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, சங்கீதா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். காந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.சங்கீதாவின் தந்தை புகாரின்படி, செந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
04-ஜூலை-201917:21:08 IST Report Abuse
hasan சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டு சரவணனுடன் சட்டப்படியான திருமணத்தை செய்திருந்தால் ஏன் இந்த நிலை , சரவணனுக்கு கல்யாணம் ஆகியிருப்பது தெரிந்தும் அவனுடன் பழகியது தவறு , இந்த ரகசியத்தை ஊரறிய செய்து பெண்ணின் தற்கொலைக்கு காரணமான சரவணனுக்கு என்ன தண்டனை
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-201902:12:34 IST Report Abuse
.Dr.A.Joseph சுய ஒழுக்கத்தை மீறும் போது தற்கொலை தவறல்ல
Rate this:
LAX - Trichy,இந்தியா
05-ஜூலை-201917:15:37 IST Report Abuse
LAXஹ.. ஹா.. தற்போதைய சூழலில், செய்திகளில் இடம்பெறுவது.. வெளிவந்தது.. வெளிவராதது.. போன்றவற்றைக் கூட்டிக்கழித்துப்பார்த்தால்.. நீங்க சொல்ற முடிவு எடுக்கப்பட்டால்.. மக்கள் கணக்கெடுப்பின் போது பாதிக்கும் அதிகமான எண்ணிக்கை குறைந்துவிடும்.. வடிவேலு ஒரு திரைப்படத்தில் தியேட்டர் நடத்தி, அதில் இடம்பெறும் ஒரு காட்சியில் 'தியேட்டரில் விளக்கை அணைத்துவிட்டு திரும்பப்போடும்போது பாத்தா..' அது வெறும் நகைச்சுவைக் காட்சியல்ல.. அதுதான் இன்றைய நடைமுறை.. ஆனா, நீங்க சொல்றமாதிரி அவரவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டு இந்த முடிவுக்கு வந்தா.. அந்த எழவு வீடுகளிலும் சென்று நம் கேடுகெட்ட அரசியல்வியாதிகள் அரசியலை அரங்கேற்ற ஏதுவானதாக்கிக்கொள்வார்களே..? கடைசில எதுவோ நினைத்து எதுவோ நடந்துவிடும்.. மொத்தத்துல அனைவருக்குமே இருக்கவேண்டிய தேவையான சுய ஒழுக்கம் மறந்து.. 'எங்கோ..........மணம் பறக்கிறது' என்றாகிவிட்டது.....
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
03-ஜூலை-201917:15:03 IST Report Abuse
arabuthamilan அவனவன்(ள்) ஒழுக்கமாக நடந்தால் இப்படிப்பட்ட கலாச்சாரக சமூக சீர் கேடுகள் நடக்க வாய்ப்பில்லை . எல்லவத்திற்கும் மேலாக கடவுளை பற்றிய payamillai.
Rate this:
LAX - Trichy,இந்தியா
05-ஜூலை-201917:16:14 IST Report Abuse
LAXஉண்மை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X