பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விவசாயம், வீடுகளுக்கு தனித்தனி மின் வழித்தடம்

விவசாயம் மற்றும் வீடு உள்ளிட்ட இணைப்புகளுக்கு, தனித்தனி வழித்தடத்தில், மின் வினியோகம் செய்யும் பணி, முதல் முறையாக விழுப்புரம், கடலுார் உட்பட, 29 இடங்களில், இந்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது.

 விவசாயம், வீடுகளுக்கு, தனித்தனி, மின், வழித்தடம்



தமிழகத்தில், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், அதிக திறனுள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அதன் உயரழுத்தம் குறைக்கப்பட்டு, இறுதியாக, துணை மின் நிலையத்திற்கு வருகிறது. அங்கிருந்து, 'பீடர்' எனப்படும், மின் வழித்தடத்தில், மின்சாரம்

அனுப்பப்பட்டு, 'டிரான்ஸ்பார்மர்' உதவியுடன்,வீடு, கடை, விவசாயம் போன்ற அனைத்து இணைப்பு களுக்கும் வினியோகம் செய்யப் படுகிறது.



மத்திய அரசு, கிராமங்களில் தடையில்லாமல், மின் வினியோகம் செய்ய, 'தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா' என்ற திட்டத்தை, செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விவசாயத்திற்கு தனி வழித்தடத்திலும்; மற்ற இணைப்புகளுக்கு, தனி வழித்தடத் திலும் மின் சப்ளை செய்யும்படி, மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், விவசாயத் திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்.




விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில், ஐந்து வழித்தடம்; உளுந்துார்பேட்டையில், 1; திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒன்பது; கடலுாரில், 14 என, மொத்தம், 29 இடங்களில், தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. 100 கோடி ரூபாய் செலவில், 2018 ஆகஸ்டில்

Advertisement

இந்த பணிகள் துவங்கின.இந்த மின் வழித்தட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.




இதையடுத்து, தமிழகத்தில் முதல் முறையாக, மேற்கண்ட இடங்களில், அடுத்த மாதம் முதல் விவசாயத்திற்கும், மற்ற இணைப்புகளுக்கும், தனித்தனி வழித்தடங்களில், மின்சாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும், இந்த முறை அமல்படுத்தப்படும்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
01-ஜூலை-201921:58:54 IST Report Abuse

Subramanian Sundararamanதடை இல்ல மின்சாரம் கொடுத்தாலும் விவசாயத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வரும் ?

Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
01-ஜூலை-201916:12:03 IST Report Abuse

Dr. Suriyaதமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சைக்கு தான் இந்த திட்டத்தை முதலில் செயல் படுத்தி இருக்க வேண்டும்.. ஆனால் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் செயல் படுத்தியிருக்கிறார்கள். இனிய ஒரு தொலைநோக்கு .

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X