‛‛உஷ்ஷ்...''- சபாநாயகர் ஓம்பிர்லா கண்டிப்பு

Updated : ஜூலை 01, 2019 | Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி: ‛‛இங்கும் அங்கும் போகக் கூடாது; குறுக்க மறுக்க நடக்கக் கூடாது; கசமுசான்னு பேசக் கூடாது'' - இதெல்லாம் லோக்சபாவில் எம்.பி.,க்களுக்கு புதிய சபாநாயகர் ஓம் பிர்லா விதிக்கும் நிபந்தனைகள். ஏன்னா, அவர் ரொம்ப ஸ்டிரிக்ட்.latest tamil news


நடப்பு லோக்சபாவில் 314 பேர் புதிய எம்பிக்கள். இதுவரை இவ்வளவு பேர் முதன்முறை எம்பிக்களாக லோக்சபாவுக்கு வந்ததில்லை.
லோக்சபா கூடிய முதல் வாரத்திலேயே 93 புதியவர்களுக்கு பேச வாய்ப்பு அளித்தார் ஓம் பிர்லா. இது புதியவர்களின் மனதை கவர்ந்துவிட, ஓம் பிர்லா அவர்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார். ஓம் பிர்லா கொடுத்த ஊக்கத்தால், விவாதங்களிலும் புதிய எம்பிக்கள் அதிக அளவில் பங்கு பெற்றனர். அவர்களது பேச்சு அர்த்தம் உள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.முந்தைய லோக்சபாவில் முதல் கூட்டத் தொடரில் மொத்தமே 60 புதிய எம்பிக்கள் தான் பேச அனுமதிக்கப்பட்டனர்.


latest tamil news


அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் மட்டுமே தமிழகத்தில் இருந்து பேசிய புதிய எம்பி. அதிக எம்பிக்களை வைத்திருக்கும் திமுகவின் எம்பிக்கள், பேசுவதற்கு அக்கட்சியின் லோக்சபா தலைவர் டி.ஆர்.பாலுவின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது. இதனாலேயே பலர் பேசவில்லை.


அனுபவம் தந்த பாடம்:

புதிய எம்பிக்களுக்கு ஓம் பிர்லா வாய்ப்பு தருவதற்கு காரணம் இருக்கிறது. 2014ல் முதன்முறை எம்பியாக ஓம் பிர்லா, லோக்சபாவுக்குள் நுழைந்த பிறகு ஒரு ஆண்டு முழுக்கவே பேச அனுமதி கிடைக்கவில்லை. தற்போதைய புதிய எம்பிக்களுக்கு அது போன்ற கசப்பான அனுபவம் கிடைக்க வேண்டாம் என்று ஓம் பிர்லா நினைக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு மதிய உணவு அருந்தக் கூட செல்லாமல், சபையை நடத்தினார் ஓம் பிர்லா.
சில புதிய பா.ஜ., எம்.பி.,க்கள் பேசத் துவங்கும்போது பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி சொல்லி, பாராட்டிவிட்டுபேச ஆரம்பித்தனர். அப்போதெல்லாம் உள்ளே புகுந்த ஓம் பிர்லா, ‛‛தேவையில்லாத பில்ட்-அப் வேண்டாம். நேரடியாக விஷயத்திற்கு வாருங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினார்.
அதே போல் சபையி்ல் அமர்ந்தபடி தங்களுக்குள் யாராவது பேசினாலும், அங்கும் இங்கும் காரணம் இல்லாமல் அலைந்தாலும் அவர்களை கண்டித்து அமர வைக்கிறார். இதுவும் மற்ற எம்.பி.,க்களை கவர்ந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
02-ஜூலை-201906:14:46 IST Report Abuse
Gnanam நல்ல துவக்கம். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
01-ஜூலை-201920:24:47 IST Report Abuse
தமிழ் மைந்தன் புளுகு எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் பேச புரோட்டாகால் எல்லாம் கிடையாது .........சும்மா அடிச்சு விடு...காசா.... பணமா....உங்க ஊழல்தலைவர் மகனுக்கு புரோட்டா வேனும் என்றால் உண்டு.............
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
01-ஜூலை-201918:39:45 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> VERY NICE இதுபோலவே தொடரவேண்டும் ஒண்ணுமே பேசாது லக்ஷமலே சம்பளம் வாங்கிண்டு அஞ்சி வருஷம் குர்ஸியை தேய்க்கவா வோட்டுப் போட்டாங்க ஜனங்க எம் பி /எம் எல் ஏ அல்லாரும் மக்கள் பிரதிநிதிகளே தான் லக்கிருந்தால் ஆளுகச்சியே மந்திரி ஆவானுக அவ்ளோதான் முக்கியமா வேண்டும் திறமை உண்மை ரெண்டுமே தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X