பொது செய்தி

இந்தியா

கடனுக்காக அலுவலகத்தை விற்கும் அனில் அம்பானி

Updated : ஜூலை 01, 2019 | Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

மும்பை : தனது நிறுவனத்தின் கடன் தொகையை குறைப்பதற்காக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தொழிலதிபர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.



latest tamil news


2005 ம் ஆண்டு சகோதரர் முகேஷ் அம்பானியிடம் இருந்து சொத்துக்களை பிரித்த போது பெற்ற தெற்கு மும்பையில் உள்ள பல்லார்டு எஸ்டேட்டிற்கு தனது அலுவலகத்தை மாற்றவும் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.
சில நாட்களாக கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்து வரும் அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை கடனில் இருந்து காப்பாற்றுவதற்காக 700,000 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள அலுவலகத்தை விற்க அல்லது நீண்டகால குத்தகைக்கு விட முன்வந்துள்ளார்.


latest tamil news


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்கள் நிறுவனத்தை நடத்துவதற்காக கடன் பெற்ற அனில் அம்பானி, கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்திற்காக தான் சிறைக்கு செல்வதை தவிர்க்கவும் சொத்துக்களை விற்று கடனை செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.
கடன் தொகை விவகாரம் தொடர்பாக எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், கடன் தொகையை திருப்பி அளிக்காவிட்டால் சிறைக்கு செல்ல வேண்டும் என அனில் அம்பானிக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
04-ஜூலை-201905:37:34 IST Report Abuse
Thalaivar Rasigan இங்கே கருத்து சொல்லும் கந்தசாமிகள் தங்கள் சொத்தை அப்படியே மக்களுக்கு எழுதி வச்சிட்டா மாதிரி எழுதுவானுங்க. அவனே தொழிலுக்காக வாங்கிய கட்ட முடியாம, சொத்தை விற்க முடிவு செய்தால் ஏழை மக்களுக்கு எழுதி கொடுக்கணுமாம். சொந்த காசில் சோசலிசம் பேசுங்கடா.
Rate this:
Cancel
Anandan - chennai,இந்தியா
02-ஜூலை-201903:42:30 IST Report Abuse
Anandan இவரல்லவோ போர் விமானத்தின் உதிரி பாகங்கள் செய்ய ஏற்றவர்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
01-ஜூலை-201923:58:24 IST Report Abuse
konanki இந்த ஆளுக்கு புழைக்கவே தெரியலை திருட்டு கட்சியில் இணைந்து தலைவர் குடும்பத்தை வெயிட்டா கவனிச்சு டா ஒரு M P பதவி வாங்கிட்லாம் அப்பறம் என்ன கோடி கோடியாக சம்பாதிக்க முடியும் மாட்டிக்கிட்டா கடனா தான் வாங்கிய து என்று சமாளிக்க முடியும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லி 25 முறை முன் ஜாமீன் பெயில் வாங்கி‌ கின்னஸ் சாதனை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X