256 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைவு

Updated : ஜூலை 01, 2019 | Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி ; இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. எனவே, நீர் மேலாண்மை குறித்து சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய 'ஜல் சக்தி' துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.இன்று (ஜூலை 1)புதுடில்லியில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் கூறுகையில், '' இந்திய அரசு, நீர்

புதுடில்லி ; இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. எனவே, நீர் மேலாண்மை குறித்து சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய 'ஜல் சக்தி' துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.latest tamil news


இன்று (ஜூலை 1)புதுடில்லியில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் கூறுகையில், '' இந்திய அரசு, நீர் மேலாண்மை குறித்த நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ளது. அதன்படி நீர் மேலாண்மை திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.


நிலத்தடி நீர்மட்டம் குறைவு :

இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. எனவே, நாம் மழை நீரை சேமிக்க வேண்டும். ஆறுகளை இணைப்பதன் மூலம் வீணாகும் நீரை சேமிக்க வேண்டும். தண்ணீரும் மின்சாரமும் இலவசம் என்ற நிலையை குறைப்பதன் மூலம், நீரும் மின்சாரமும் வீணடிப்பதை தடுக்க முடியும்.


latest tamil newsஒரு சொட்டு நீரையும்...

தண்ணீரை சேமிக்க சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் சேமித்து பாதுகாக்க வேண்டும். அதற்கு பாரம்பரியமான வழிமுறைகள் குறித்து ஆராயவேண்டும்.


உச்சபட்ச முக்கியத்துவம் :

இதற்கு விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அரசு சாரா நிறுவனங்களை இணைத்து மிகப்பெரும் அமைப்பாக செயலாற்ற வேண்டி உள்ளது. நீர் சேமிப்பிற்கு உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதும், ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சங்களும் நமக்கு அபாயமணியை ஒலித்துள்ளன,'' என்றார்.


மன்கி பாத்தில் பிரதமர் :

கடந்த 2 நாட்கள் முன்னதாக, 'மன்கிபாத்' மூலம் உரையாற்றிய மோடி, ஒவ்வொரு சொட்டு நீரையும் பாதுகாக்க வேண்டும். நீராதாரங்களை சேமித்து பாதுகாக்கும் உங்களது ஆலோசனைகளை ஜல் சக்தி அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதற்காகவே அந்த துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.
இந்தப் பின்னணியில் தான் ஜல் சக்தி துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து, தனது அமைச்சகத்தின் நோக்கங்கள், செயல்படுத்த உள்ள திட்டங்கள், வழிமுறைகள் குறித்து விளக்கியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-201909:44:06 IST Report Abuse
ஆப்பு விழிப்புணர்வு எங்களுக்கும் தெரியும். 1970 லேருந்தே எம்.எஸ் .சுவாமிநாதன் அவர்கள் விவசாயத்துல புரச்சி பண்றேன் பேர்வழின்னு 309, 400 அடிக்கு பம்ப் செட் போட்டு நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பிச்சுட்டாரு...பசுமை புரட்சி அவார்டு வாங்கி போயும் சேந்துட்டாரு. இப்போ உங்க கையில் என்ப திட்டம் வெச்டிருக்கீங்க அதை சொல்லுங்க. உங்க தலைவர் மாதிரி எல்லோரும் வாயால வடை சுடாதீங்க...
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
01-ஜூலை-201921:17:24 IST Report Abuse
mohan சார், நீங்கள் நல்லவர்கள், மக்கள்தான் மோசம். தன் வாக்கு சீட்டை, பணத்திற்கு அடகு வைத்து விட்டு, அரசாங்கத்திடம், தண்ணீர் கேட்பது என்பது, என்ன நியாயம்...ஒரு மனிதன், தான் மது அருந்துவதற்கு, தன் வீட்டை அடகு வைத்து விட்டு குடிக்கிறான் என்று வைத்து கொள்வோம். தான் அடகு வைத்த வீட்டை எப்படி திருப்பி வாங்குவான்... எல்லாம், மதுவில் போய் விடும்... அதே போல், பொறுப்பற்ற மனிதர்கள், தங்கள் பகுதியில் இவ்வளவு நீர் வீணாக்குகிறது, இதை சேமிக்க, அங்கங்கே குளங்கள் வெட்டலாம். நீரை சேமிக்கலாம்...40000 மெகா வாட் மின்சாரம், எடுக்கலாம். இதை எல்லாம் செய்ய தவறியது, மக்கள் குற்றம்...அரசு எவ்வளவோ நல திட்டங்கள் செய்கின்றது.. அதை பயன் படுத்த தவறியது மக்கள் குற்றம்... நூறு நாள் வேலை செய்யும் மனிதர்கள் என்ன செய்கிறார்கள். அய்யகோ, நாம் அரசு பணம் வாங்குகிறோம். நாம், நமது கிராமத்தின் குளத்தை தூர் வருவோம் என்று வேலை செய்கிறார்களா..இல்லை மரத்தடியில் படுத்து உறங்கி விட்டு, சும்மா வருகின்றனர்.. அவர்கள் அவர்களின் ஊரை சுற்றி உள்ள வாய்க்கால்களை தூர் வாரினால் போதுமே... யாருக்காவது புரிந்து வேலை செஇகிறார்களா.. இல்லை...என்ன செய்ய எப்படி மழை பெய்யும். நீங்கள் மனதில் மழையையும், நீரினையும், நினைத்தால் தானே... ஊரில் உள்ள கோவிலை பற்றி யாருமே நினைக்க விட்டால், ஊரில் கோவில் எதற்கு... நீரினை பற்றி யாருமே நினைக்க விட்டால், காமராஜர் திரும்பி வந்து , அணை கட்டு வார, மரம் நடுவாரா, ..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
01-ஜூலை-201920:26:48 IST Report Abuse
Visu Iyer பணம் சம்பாதித்தால் வரி - சரி.. வருமான வரி.. பணம் செலவு செய்தால் வரி - சரி.. சேவை வரி.. இன்சூரன்ஸ் போன்ற சேமிப்பு மற்றும் பாதுகாப்புக்கும் வரி.. - அட கடவுளே... கடன் அட்டையில் வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டிக்கும் வரி... - இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றுகிறதா....? எல்லா வழிகளிலும் வரி கேட்பவர்கள்.. இனி (சிக்கனமாக பயன்படுத்த தான்) தண்ணீருக்கும் வரி என்றால்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X