முடிவை மாற்ற முடியாது: ராகுல்| Dinamalar

முடிவை மாற்ற முடியாது: ராகுல்

Updated : ஜூலை 01, 2019 | Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (27)
Share
2 புதுடில்லி : பதவி விலகும் எனது முடிவில் நான் தெளிவாக உள்ளேன் என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.தற்போதைய சூழலில் ராகுல் தலைவராக தொடர்ந்தால் தான் சரியாக இருக்கும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலtட் இன்று காலை பதிவிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்., தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால்

2 புதுடில்லி : பதவி விலகும் எனது முடிவில் நான் தெளிவாக உள்ளேன் என காங்., தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.



latest tamil news


தற்போதைய சூழலில் ராகுல் தலைவராக தொடர்ந்தால் தான் சரியாக இருக்கும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலtட் இன்று காலை பதிவிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்., தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவரது மனநிலை மாறி இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் இது தொடர்பாக ராகுலிடம் கேட்ட போது, நான் எனது முடிவில் தெளிவாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் அது தெரியும் என்றார். இதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 1) பிற்பகல் டில்லியில் காங்., ஆளும் மாநில முதல்வர்களுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.


latest tamil news


முன்னதாக இன்று காலை ராகுலை சந்தித்த அசோக் கெலாட், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்துள்ளார். பிறகு, தோல்விக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால் ராகுல் தொடர்ந்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X