காங்., எம்எல்ஏ.,க்கள் 2 பேர் ராஜினாமா

Updated : ஜூலை 01, 2019 | Added : ஜூலை 01, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

பெங்களூரு : கர்நாடகாவில் காங்., அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.



latest tamil news


காங்., கட்சியை சேர்ந்த அனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிகோலி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். அனந்த் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரை நேரில் சந்தித்து அளித்துள்ளார். ரமேஷ் ஜர்கிகோலி தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அளித்துள்ளார்.
மேலும் சில காங்., எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அனந்த் சிங் கூறி உள்ளது காங்., தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் சொகுசு விடுதியில் காங்., எம்எல்ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது அனந்த் சிங், மற்றொரு காங்., எம்எல்ஏ.,வால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு காங்., கட்சிக்குள் சலசலப்பு இருந்து வந்ததே தற்போது எம்எல்ஏ.,க்களின் ராஜினாமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது.


latest tamil news


கர்நாடகா முதல்வர் குமாரசாமி தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் காங்., எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளது ஆளும் காங்- மஜத கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் காங்., எம்எல்ஏ.,க்களின் செயல்பாடுகளை உற்று கவனித்து வருவதாக கர்நாடகா பா.ஜ., தெரிவித்துள்ளது. கர்நாடகா பா.ஜ., தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறுகையில், அனந்த் சிங்கின் ராஜினாமா பற்றி மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அரசை கவிழ்க்க நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை அரசு தானாக கவிழ்ந்தால், புதிய ஆட்சி அமைப்பதற்கான சாத்தியகூறுகளை நாங்கள் கையில் எடுப்போம். ஆனால் மீண்டும் தேர்தல் என்ற பேச்சிற்கே இடமில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-201905:57:21 IST Report Abuse
ஆப்பு கையைக் காலைப் புடிச்சு ஆதரவு கேக்கணும்...இல்லே கையைக் காலை ஒடைச்சு ஆதரவு வாங்கிடுவோம்.. எடியூரா கொக்கா..
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
02-ஜூலை-201910:16:11 IST Report Abuse
Chowkidar NandaIndiaஎப்படி? ஆந்திராவை இரண்டாக பிரிக்கும்போது சபையிலிருந்த எல்லோரையும் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவிட்டு மசோதாவை நிறைவேற்றியது போலவோ .....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
01-ஜூலை-201918:28:46 IST Report Abuse
வல்வில் ஓரி ஆனந்தன், வந்தியத்தேவன்ன்னு பல தீம்கா குடும்ப பல்லக்கு தூக்கிகள் முக்கி முக்கி முட்டு கொடுத்தாங்கோ....கர்நாடகாவுல கான்கிராஸ் மஜாக செம்மையா ஆண்டு தள்ளிரும் ன்னு ....
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
01-ஜூலை-201918:12:18 IST Report Abuse
DSM .S/o PLM எழுபத்தைந்து எம் எல் ஏக்களில் இருவர் மட்டும் ராஜினாமா செய்தால் கட்சித்தாவல் தடைச்சட்டம் பார்த்துக்கொண்டு இருக்குமா? குறைந்தது இருபத்தைந்து எம் எல் ஏக்களாவது விலக வேண்டுமே.
Rate this:
Sudalai Mani - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஜூலை-201918:40:25 IST Report Abuse
Sudalai Maniஐயோ பாவம் 2 MLA resign பண்ணிட்டாங்க கட்சி மாறல கட்சித்தாவல் தடைச்சட்டம் இங்க வேலையே இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X