பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி
நீட்டிக்க பார்லி ஒப்புதல்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதியின் ஆட்சியை மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது. லோக்சபா ஏற்கனவே ஒப்புதல் அளித்த நிலையில், ராஜ்யசபாவிலும் இந்த தீர்மானம், நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நேற்று நிறைவேறியது.

Kashmir,காஷ்மீர்,ஜனாதிபதி,ஆட்சி,நீட்டிக்க,பார்லி,ஒப்புதல்


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்தாண்டு நவ., 21ல், ஆட்சி கலைக்கப்பட்டது.

தீர்மானம்:


அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. அதையடுத்து, இன்று முதல், மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதியின்

ஆட்சியைத் தொடர்வதற்காக தீர்மானத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானம், லோக்சபாவில், நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்த நிலையில், ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்தை, உள்துறை அமைச்சர், அமித் ஷா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபைக்கான தேர்தலை இந்தாண்டு இறுதியில் நடத்துவது என, தேர்தல் கமிஷன் முடிவு எடுத்துள்ளது. அதனால், வேறு வழியில்லாமல் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைமையை புரிந்து கொண்டு,எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தாண்டு, மே 7 முதல், ஜூன், 4 வரை, ரம்ஜான் மாதம். வழக்கமாக, ரம்ஜான் மாதத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படாது.

மேலும், ஜூன், 30 முதல், ஆக., 15வரை, அமர்நாத் யாத்திரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில், பகர்வால் சமூக மக்கள், மலைப் பகுதிக்கு சென்று, அக்டோபரில் தான் திரும்புவர். அதனால், இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த தீர்மானத்துடன், ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ளவர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

விவாதம்:


அதேபோல், சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்வதற்காக, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானம் மீது, ராஜ்யசபாவில் நேற்று நீண்ட நேரம் விவாதம் நடந்தது. இறுதியில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம்; மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்.,; உ.பி., முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவுடன், இந்த தீர்மானம், ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - chennai,இந்தியா
02-ஜூலை-201907:49:31 IST Report Abuse

Sureshரா நா கோவிந்த் போஸ் கொடுக்கிற போட்டோ ஏன் போடுறீங்க? உத்தரவு கடுதாசியில் கையெழுத்து போட்டு ஸ்டாம்ப் அடிப்பதோடு அவர் வேலை ஓவர். மத்தது எல்லாம் மேலே இருக்கிறவர் (அமித் ஷா) பாத்துக்குவார்.

Rate this:
blocked user - blocked,மயோட்
02-ஜூலை-201904:13:05 IST Report Abuse

blocked userகடைசி தீவிரவாதி இருக்கும் வரை தேர்தல் நடத்துவது சரியான முடிவு அல்ல. ஆகவே காஷ்மீர் கிட்டத்தட்ட வீணாய்ப்போன மாநிலம்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X