பதிவு செய்த நாள் :
'பார்லிமென்ட்டை கேள்விக்குள்ளாக்குவேன்'
பா.ஜ.,வை கொந்தளிக்க வைத்த தி.மு.க., - எம்.பி.,

''பார்லிமென்ட்டை, கேள்விக்கு உள்ளாக்கவே செய்வேன். அதில்,எந்த தவறும் இல்லை. இதற்காக நீங்கள் கோபித்தால், எனக்கு கவலை இல்லை,'' என தி.மு.க., - எம்.பி., ராஜா பேசியதை கேட்ட, பா.ஜ., - எம்.பி.,க்கள் கொந்தளித்தனர்.

B.J.P,BJP,Bharatiya Janata Party,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,பா.ஜ,பார்லிமென்ட்,கேள்விக்குள்ளாக்குவேன்,பா.ஜ.,தி.மு.க.,எம்.பி.,


உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் நேற்று நடந்தது. அதில், தி.மு.க., - எம்.பி., ராஜா பேசியதாவது: ஆலோசனை இன்றி, ஒரே நாளில் அரசியல் சட்டத்தை திருத்தி, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சட்டம், இந்த சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் குறித்த விவகாரம், சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, அரசு முயற்சிப்பது சரியல்ல.

கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களுக்குத்தான் இடஒதுக்கீடு என

இருக்கும்போது, சட்டத்தில் இடம்பெறாத பொருளாதார அளவுகோலை, எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். எனவே, இந்த சட்டம் தவறு. இவ்வாறு, ராஜா பேசினார்.

அப்போது, பா.ஜ., மூத்த எம்.பி., அலுவாலியா, ''இந்தசபை நிறைவேற்றிய சட்டத்தை, எப்படி தவறு என கூறலாம். பார்லிமென்ட்டையே, கேள்விக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது'' என்றார்.

உடனே ராஜா, ''நான் இந்த சபையை, கேள்விக்குள்ளாக்கவில்லை. இந்த சட்டத்தை நிறைவேற்றிய நடைமுறையைத்தான் கேள்வி எழுப்பினேன். இதற்காக நீங்கள் கோபித்தால், எனக்கு எந்த கவலையும் இல்லை,'' என்றார்.

முன்னதாக, கேள்வி நேரம் முடிந்ததும், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை, தமிழகத்தில் நிறைவேற்ற கூடாதென வலியுறுத்தி, தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு, குரல் எழுப்பினார். பெட்ரோலியத் துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான், '' இப்பிரச்னை, பல ஆண்டு களாக நீடிக்கிறது. இதுகுறித்து, விரிவாகவும், வெளிப்படையாகவும் விவாதம் நடத்த அரசு தயார்,'' என்றார்.

Advertisement

மதுரை, மார்க்சிஸ்ட் எம்.பி., - வெங்கடேசன், ''2,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு, இன்றும் வாழும் நகரமாக உள்ளது, மதுரை. ''இதன் பழமையான நாகரிகத்தை பறைசாற்ற, கீழடி அகழாய்வில் கிடைத்த, 15,ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட்களே, சாட்சி. எனவே, மதுரையை, வரலாற்று பாரம்பரிய நகரமாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்,'' என்றார்.

கன்னியாகுமரி, காங்., எம்.பி., - வசந்தகுமார், ''கடல் அரிப்பு, இயற்கை பேரிடர் ஆகியவற்றின்போது, மக்கள் தப்பிக்க, இறை மன்துறை - தேங்காய்பட்டணம் இடையே, பாலம் கட்ட வேண்டும். ''ஆரோக்கியபுரத்திலிருந்து, இறைமன்துறை மற்றும் நீரோடி ஆகிய பகுதிகளுக்கு, நல்ல சாலை வசதி செய்து தர வேண்டும்,'' என்றார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூலை-201912:29:19 IST Report Abuse

Sriram VRaja before asking the question return the looted 2G money. Why the reservation cannot be given to economically weaker sections. Mostly reservation is misused by corrupt people like you, you and your family is enjoying all the benefits of reservations and not the needy people. Are you ready to accept the challenge of declaring your assets with source of income including all family members

Rate this:
bal - chennai,இந்தியா
07-ஜூலை-201914:54:23 IST Report Abuse

balஜாமினில் வெளியில் இருக்கும் ஆளுங்களுக்கெல்லாம் மக்கள் குவாட்டர், பிரியாணி மற்றும் துட்டுக்கு ஒட்டு போட்டாங்கல்ல...தமிழ் நாடு டுமீல் நாடாக ஆகும் இந்த குற்றவாளிகளால்..பாருங்கள்.

Rate this:
karutthu - nainital,இந்தியா
07-ஜூலை-201908:41:41 IST Report Abuse

karutthuஇவனை சொல்லி குற்றமில்லை இவனை ஜெய்க்க வைத்த மட ஜென்மங்களை ........... என்ன செய்ய ?

Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
07-ஜூலை-201923:02:11 IST Report Abuse

Thirumuruganநீ பெரிய அறிவாளி ...

Rate this:
மேலும் 116 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X