இதுவரைக்கும் 200; இப்படியும் ஆசை 'இன்ஸ்'க்கு...!

Updated : ஜூலை 02, 2019 | Added : ஜூலை 02, 2019
Advertisement
அவசர, ஆத்திரத்துக்கு கூப்பிடறதுக்குத்தான் மொபைல்போன் இருக்குது. சில நேரங்களில், 'ரிங்' ஆன கூட, எடுக்கறதேயில்லை. அப்புறம் அவங்களுக்கு எதுக்கு போனுடி,'' படபடவென பொறிந்து தள்ளியவாறு, வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள் சித்ரா.அதை கேட்டு ஒன்றும் புரியாத நிலையில், ''அக்கா... கூல்டவுன். யாரை சொல்றீங்க. சொல்லிட்டு திட்டுங்க,'' என சிரித்தாள் மித்ரா.''அரசு அதிகாரிகள்தான்
இதுவரைக்கும் 200; இப்படியும் ஆசை 'இன்ஸ்'க்கு...!

அவசர, ஆத்திரத்துக்கு கூப்பிடறதுக்குத்தான் மொபைல்போன் இருக்குது. சில நேரங்களில், 'ரிங்' ஆன கூட, எடுக்கறதேயில்லை. அப்புறம் அவங்களுக்கு எதுக்கு போனுடி,'' படபடவென பொறிந்து தள்ளியவாறு, வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள் சித்ரா.அதை கேட்டு ஒன்றும் புரியாத நிலையில், ''அக்கா... கூல்டவுன். யாரை சொல்றீங்க. சொல்லிட்டு திட்டுங்க,'' என சிரித்தாள் மித்ரா.''அரசு அதிகாரிகள்தான் இப்படி பண்றாங்க.


கவர்மென்ட் 'சிம்' இருக்கற மொபைல் போன, 'சுவிட்ச் ஆப்' பண்ணி வச்சுக்கறாங்க. தண்ணீர் பிரச்னை தலைவிரிச்சு ஆடறப்ப, அதிகாரிகள கூப்பிட்டு கேட்கலாம்னா, ஏ.பி.ஓ., முதல் பி.டி.ஓ., வரை, சுவிட்ச் ஆப்' பண்ணி வச்சுட்டா எப்படி?பி.டி., கொஞ்சம் கவனிச்சா பரவாயில்ல,''

''கரெக்ட்டுக்கா. கண்டிப்பாக கண்டிக்க வேண்டியதுதான்,''என்ற மித்ரா, ஊத்துக்குளி ரோட்டில், பாலம் பணிகள் நடப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு, ''அக்கா... இதென்ன உலக அதிசயமா இருக்கு. பாலம் வேலை துவங்கிடுச்சு,''''ஆமாண்டி மித்து. தெற்கு தொகுதிக்குள்ள பாலம் வேலை முடிஞ்சிருச்சு. வடக்கு தொகுதியில பாதியோடு நின்னுடுச்சு. இப்ப, திருத்திய மதிப்பீட்டுல, ஆறு கோடி ரூபா கூடுதலா சேர்த்து, வேலைய மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்க''
''பரவாயில்லை, நல்ல விஷயம்தானே. 'விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, கட்டப்பஞ்சாயத்து பண்ண முடியாதுனு, கலெக்டர் காட்டமாக சொல்லிட்டாராமே,'' பொடி வைத்தாள் மித்ரா.
''ஏன், மித்து... போலீசுக்கு போட்டியா, வருவாய்த்துறையில கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியுமா என்ன?''''மயானம், ஆக்கிரமிப்புனு, தனிப்பட்ட பிரச்னைகளை இங்க கொண்டு வர்றீங்க. ஒரு குரூப் மயானம் வேண்டாம்னு மனு கொடுக்குது; மற்றொரு குரூப், மயானம் வேணும்னு வருது. இப்படியெல்லாம் பண்ணித்தான், தேர்தல் நேரத்துல பிரச்னையாச்சு,''
''அதுமாதிரி பிரச்னைக்கு போட்டி போட்டு மனு கொடுத்தா, கட்டப்பஞ்சாயத்து பண்ண முடியாது. பேசி தீர்த்துட்டு வாங்க, அப்புறம் பார்த்துக்கலாம்,'னு, கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம்'' என்றாள் மித்ரா.''ஆமாமா... கலெக்டருக்கும் கோபம் வராதா பின்னே,'' என்ற சித்ரா, ''கால்நடைத்துறை அமைச்சர் மாவட்டத்துலயேஇந்த நிலைமையா?'' என்றாள் சித்ரா.
''என்னக்கா, ஏதோ ஆடு, மாடு திட்டத்த பத்தி சொல்ல வர்ற மாதிரி இருக்கே''''நீ சொல்றது ஓரளவுக்கு கரெக்ட் மித்து. எலக்ஷன் முடிஞ்சதும், கால்நடைத்துறை இணை இயக்குனர் 'ரிட்டயர்டு' ஆனாரு.
அடுத்த நிலையில இருந்த திருப்பூர் 'ஏ.டி.,' வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு போயிட்டாரு. அதிகாரிங்க இல்லாம, கால்நடைத்துறையில என்ன நடக்குதுனு தெரியல,''''தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டம் நடக்குது. ஆனா, திருப்பூர் மாவட்டத்துல நடக்கற மாதிரியே தெரியலை. துறை அமைச்சர் இருந்தும் ஒண்ணும் கண்டுக்கறதில்லை'' என்றாள் சித்ரா.
''ஏக்கா.. அமைச்சர் அப்படின்னா, இந்த எம்.எல்.ஏ.,க்கள் அலப்பறை தாங்க முடிலைங்க்கா,''''அப்படி என்னடி சொல்றாங்க?'''' எந்த திட்டமா இருந்தாலும், எங்களை கேட்டுத்தான் செய்யோணும், எம்.எல்.ஏ.,க்கள் கடுமையா சொல்லீட்டாங்களாம்,'' ''ஓேஹா...''''சட்டசபை தொகுதி வாரியாத்தான் திட்டத்தை செயல்படுத்தனும். எதாக இருந்தாலும்,எம்.எல்.ஏ., கிட்ட கேட்டுத்தான் முடிவு பண்ணனும்'னு திட்டவட்டமாக சொல்லிட்டாங்களாம்'' மித்ரா சொன்னவுடன், ''அப்புறம் என்னடி, 'அம்மா டூ வீலர்' திட்டம் மாதிரி, எம்.எல்.ஏ., 'டிக்' பண்றவங்கதான் பயனாளிகளா இருப்பாங்க,'' என சிரித்தாள் சித்ரா.
வண்டி, அவிநாசி ரோடு, அம்மாபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, செக்போஸ்ட்டில், இரண்டு இளைஞர்கள், சோதனை செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, டென்ஷனாகி, ''ஏண்டி... மித்து. போனவாரம்தான், எப்.ஓ.பி., பசங்க 'சேட்டை' பற்றி பேசினோம். இப்ப பாரு... இங்கயும் பசங்களை வச்சு, வசூல் பண்றாங்க போல,''''அக்கா... எல்லா செக் போஸ்ட்லயும் இந்த எப்.ஓ.பி.,க்கள் குச்சியை நீட்டி, வாகன ஓட்டிகளை தடுப்பது வழக்கமா போச்சு,''''இதனால, வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம்படறது சகஜமாகி விட்டது.
இதோட, அம்மாபாளையத்தில் உள்ள செக்போஸ்ட்டில், ஒட்டு மொத்தமா வண்டியை நிறுத்துறதால, ராத்திரி நேரங்களில், கனரக வாகனங்கள் வேகமாக வந்தால், தடுமாறி அசம்பாவிதம் ஏற்படும். அதிகாரி கவனிச்சா பரவாயில்லை,'' என்ற சொன்ன சித்ரா, உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.செக்போஸ்ட் அருகில், அரசு போக்குவரத்து டிப்போ வேன் பழுதாகி நின்று கொண்டிருந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''ஏக்கா.. பிரேக் டவுன் வேன், பிரேக் டவுன் ஆயிடுச்சு,'' என, சிரித்தாள்.

''என்னடி பண்றது. அரசு டிப்போ எல்லாம் இப்டித்தான் இருக்குது. போன வாரம், பல்லடம் டிப்போவில், கலெக்ஷன் பணம் திருட்டு போனது. போலீஸ் விசாரணையில் கண்டக்டர் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க,''''இவ்ளோ நடந்தும் கூட, 'சிசிடிவி' பொருத்தற முயற்சியை அதிகாரிங்க எடுக்கலை''''அட... லுாசு. கேமரா மாட்டினா, ஏகப்பட்ட தில்லுமுல்லு வெளியே வந்துடுமே. அதுக்குத்தான் அதிகாரிங்க, எதுவுமே நடக்காததுபோல், இருக்றாங்க,'' என சித்ரா சொன்னதும், ''ஆமாங்க்கா... நீங்க, சொல்றது, கரெக்ட்தான்,''ஆமோதித்தாள் சித்ரா.
''அக்கா.. தலைவலிக்குது.. காபி குடிக்கோணும்,'' என்று மித்ரா சொன்னதும், ஒரு ஓட்டலின் முன் வண்டியை நிறுத்தி இருவரும் உள்ளே சென்றனர்.சாம்பார் வடையும், பில்டர் காபியும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர். ஓட்டலில் ஒட்டி யிருந்த 'பார்சலுக்கு பாத்திரம் கொண்டு வரவும்' என்ற அறிவிப்பை பார்த்த சித்ரா, ''இங்க பரவாயில்லை. அவிநாசியில் ஆட்டோ, மொபட் மூலம், ராத்திரி நேரத்தில், பாலிதீன் கவர் விற்கிறாங்களாம்,''''அட... கொடுமையே! இப்டியெல்லாம பண்ணுவாங்க. அந்த மாதிரி நபர்களை பிடிச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கோணும்க்கா,''வடையும், காபியும் வரவே, இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.அப்போது, மொபைல் போன் ஒலிக்கவே எடுத்து பேசிய சித்ரா, ''மணிமொழி ஆன்ட்டி... இன்னும் 'ஒன்-ஹவரில்' வந்துடுவேன்,'' என்றவாறு ஆப் செய்தாள்.
''போனில் யாருக்கா?''''சிட்டி லிமிட்டில், உள்ள 'வீர'மான ஸ்டேஷன் அதிகாரி செய்ற 'மணி'யான வேலையை நீயே கேளு. என்கொயரிக்குவர்றவங்ககிட்ட, முதலில் மொபைல் போன்களை வாங்கி வச்சுட்டு, நாளைக்கு வான்னு சொல்றது. வந்து கேட்டா,மறுபடியும் கொடுக்கறதில்லையாம்,'' ''அதேபோல, வழக்குகளில் சிக்கும் மொபைல் போன்களையும் கணக்கு காட்டாமல், இருந்தால், அதையும் 'லவட்டி'ப்பாராம். இப்படி, 200 மொபைல் போனுக்கும் மேல, 'ஸ்வாஹா' பண்ணிட்டாராம். அவர் மேல, இப்படி பல புகார் வந்தாலும், நடவடிக்கை மட்டும் நஹி,''''எப்படியும் இதை விட பெரிய கேஸில் மாட்டினா, நல்லா வைச்சு செஞ்சிடுவாங்க பாறேன்,'' என்ற சித்ரா, ''சரி வாடி....போலாம்,'' என பணம் கொடுத்து விட்டு நகர்ந்தாள்.

ஓட்டலுக்குள் நுழைந்த ஒரு அரசியல்வாதியை பார்த்த கல்லாவிலிருந்தவர் எழுந்து ''அண்ணா, வணக்கமுங்க,'' என்றார் பவ்யமாக.அதைக்கவனித்த மித்ரா, ''பணம், பாலிக்டிஸ், பவர்... இப்படி மூணுலயும், எப்பவும், 'கிங்'தான்'' என,'' புதிர் போட்டாள்.''மித்து, அப்படி யாருப்பா, மூன்றையும் கையில வச்சுருக்கிறது,''''அக்கா, 'சிட்டி' போலீஸ் ஐ.எஸ்.,க்கு வர பலத்த போட்டி நடந்துட்டு இருக்குனு ஏற்கனவே சொல்லியிருக்கேன். அதில, கோவைக்கு டிரான்ஸ்பரில் போன இன்ஸ்., ஒருவர், தற்போது, இங்கேயே வந்துட்டாரு,'''''சிட்டி' சட்டவிரோத செயல்களில் ஒட்டுமொத்த கூடாரமாக மாறிட்டு வருது.
கமிஷனரும் பெருசா கண்டுக்கறதில்லை,. இதையெல்லாம், தெரிஞ்சுகிட்டு, தன்னோட 'மூணு' பவரையும் 'யூஸ்' பண்ணி, வந்துட்டாராம்,''''அப்புறமென்ன, பருவ மழைக்கு பதிலா, 'பண மழை' பெய்யப்போகுதுன்னு' சொல்லு.,'' சிரித்த சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டி, மீண்டும் ராக்கியாபாளையம் ரோட்டில் பறந்தது.''மித்து, இந்த பிச்சம்பாளையம், ஸ்ரீ நகர் ஏ.டி.எம்., பக்கத்தில், தினமும், ரெண்டு பேரு ஒருநம்பர் லாட்டரி விக்கறங்களாம்.
அவங்களை பத்தி போலீசுக்கு சொல்லியும், ஒரு கல்லை கூட நகர்த்த முடியலை. இந்த லாட்டரி வாங்கி, நுாத்துக்கணக்கானலேபர், சம்பளத்தை தொலைக்கிறாங்க,''''இதுக்கு ஒரு விடிவு காலம் வரமாட்டேங்குதே அக்கா,''''பொறுமையா இருடி... கண்டிப்பா வரும். தாராபுரம் மாதிரி,''''அங்க... அப்படி என்ன நடந்தது?''
''அமராவதி ஆற்றில் மணல் திருடுவது சகஜமாக போச்சு.இது சம்பந்தமாக யாராவது போலீசுக்கு தகவல் கொடுத்தால், நடவடிக்கை சும்மாதான். இதனால், யார் புகார் கொடுக்குறாங்க என்ற விஷயம்மணல் திருட்டு கும்பலுக்குபோய், வெட்டு குத்துன்னு ஆயிடுச்சு''''இதைப்பத்தி புகார் மேல் புகார் போனதால, டி.எஸ்.பி.,யை டிரான்ஸ்பர் செஞ்சுட்டாங்க. சென்னையிலிருந்த வர்ற அதிகாரியாவது, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரான்னு பார்க்கலாம்,'' சொன்ன சித்ரா, ஒரு பங்களாவை பார்த்ததும், வண்டியை நிறுத்தி, மீண்டும் ஓட்டினாள்.''ஏங்க்கா... என்னாச்சு''''இரு அப்புறம் சொல்றேன். பொள்ளாச்சி பாலியல் கொடூரம் போலவே, திருப்பூரில் நடந்துச்சு தெரியுமா''''ஓ... தெரியுமே''''அந்த விவகாரத்தை உளவுத்துறை போலீசார் சத்தமில்லாம விசாரிச்சுட்டு வர்றாங்க.
'டிரைவிங் ஸ்கூல்' 'கால் டாக்ஸி'வச்சிருக்கிறவங்களுடன் தொடர்பு இருக்குதாம். இப்படி நிறைய பேர் சம்பந்தப்பட்டு இருந்தாலும், பெட்டிஷன் ஏதும்வர்றலை. அதனால விசாரிக்கலைன்னு, சொல்லி தப்பிக்க பார்க்கிறாங்க,''''ஆனா, உளவுத்துறைபிரிவு போலீசார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கு என, 'லிஸ்ட்' எடுத்து, அவங்க யார் கூட எல்லாம் பேசிக்கிறாங்க, 'வாட்ஸ்அப்' கால், மெசேஜ்னு, ஒண்ணு விடாம கலெக்ட் பண்ணிட்டு இருக்காங்களாம். சிலரை பற்றி காதும், காதும் வச்ச மாதிரி விசாரிச்சிட்டு, நெருங்கிட்டாங்களாம்,''''இந்த பிரச்னை, மறுபடியும் எப்ப எரிமலையாக வெடிக்கப்போகுதுனு தெரியலடி,'' என்று சித்ரா சொன்னதும், ''சென்சிட்டிவ் பிரச்னையாச்சே. யாராக இருந்தாலும், போலீஸ், மோதி பார்த்துடுவாங்க.
உப்பை திண்ணவன் தண்ணி குடிச்சுதான் ஆகணும்,'' என்றாள் மித்ரா ஆவேசமாக.''சரி வாடி. கிளம்பலாம். அப்படியே 'சரவணபவனில்' போய் டிபன் வாங்கிட்டு, கிளம்பலாம்,'' சொல்லி விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா. ஓடி வந்து, பில்லியனில் உட்கார்ந்து விட்டு, 'போலாம் ரைட்' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X