சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு திமுகவே காரணம் என பா.ஜ.,தேசிய செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 1967ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிப்பு. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீர்நிலையின் மீது. வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காளை மற்றும் எருது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்தது, நெடுவாசல், மீத்தேன், நீட், கர்நாடகா காவிரியில் தமிழகத்தை கேட்காமல் அணைகள் கட்டியது, கச்சத்தீவை தாரை வார்த்தது இவை அனைத்தும் திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இன்று கோரிக்கை, போராட்ட வேஷமா? @PTTVOnlineNews
— H Raja (@HRajaBJP) July 2, 2019
