91 வயதிலும் கற்கிறார் கற்பிக்கிறார்.

Updated : ஜூலை 02, 2019 | Added : ஜூலை 02, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement




latest tamil news



சென்னை தாம்பரத்ததை அடுத்துள்ள சேலையூரில் வசிக்கும் 91 வயதாகும் ரெங்கநாத சர்மாவைப் பார்க்கவும் பாராட்டவும் மக்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றனர்.ரணம் அவர் சமஸ்கிருத மொழி்க்கு ஆற்றிவரும் பணியை பாராட்டி சமீபத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு அளித்த ‛ஆச்சார்யரத்னம்' என்ற மிகப்பெரிய பாராட்டும் கவுரவமும்தான்.

சமஸ்கிருத மொழி மீதான ஆர்வம் காரணமாக சிறுவயதிலேயே படிக்க ஆரம்பித்தவர் அதன் பிறகு அந்த மொழியை எதுவரை படிக்கமுடியுமோ அதுவரை படித்து அனைத்து பட்டமும் பெற்றுள்ளார்.



latest tamil news



நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி கல்லுாரிகளில் சமஸ்கிருத மொழி ஆசிரியர், பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர்.ஒய்வுக்கு பின் சமஸ்கிருத ஆய்வில் இன்று வரை சுறுசுறுப்புடன் ஈடுபட்டிருப்பவர்.



latest tamil news




எனக்கு சமஸ்கிருதம் போலவே தமிழ் ஆங்கிலம் இந்தி மலையாளம் ஆகிய மொழிகளும் நன்கு தெரியும். இதில் சமஸ்கிருதம் வேத மொழி மட்டுமல்ல தேவ மொழியும் கூட, இதில் எழுதப்படாத சொல்லப்படாத விஷயங்களே இல்லை,கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும் எளிதுதான்.

இந்த மொழியை குழந்தை இலக்கியமாகவும், நாடகமாகவும் ,கதையாகவும்,கவிதையாகவும் மக்களிடம் கொண்டு செல்லும் விதத்தில் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளேன்.இன்னும் எழுதிவருகிறேன்,ஆர்வமுள்ள அனைவருக்கும் வீட்டில் வைத்து கற்றுக்கொடுத்தும் வருகிறேன் என்றார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு தருவதே சிறந்த கடமை என்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் எனக்கு கவர்னர் கையால் கிடைத்த விருது நிறைய உற்சாகம் தந்துள்ளது, இன்னும் இந்த மொழிக்காக உழைக்க வேண்டும் நிறைய பேரிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்ற உந்துதலை தந்துள்ளது என்று சந்தோஷத்துடன் ரெங்கநாத சர்மா கூறிமுடித்தார்.இவரிடம் பேசுவதற்கான எண்:044-22291720.

-எல்.முருகராஜ்.

murugaraj@dinamalar.in




Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
05-ஆக-201907:15:02 IST Report Abuse
Darmavan long live sri.Ranganatha sarma
Rate this:
Cancel
மு.நா.பூங்கொடி செந்தில்குமார்,மதுரை. 91 வயது சிறியவன் ஐயா நீங்கள்...... வேதம் கற்றலும் கற்ப்பித்தலும்........ திறமையை வெளிப்படுத்தியிருக்கிரீர்கள்..... எங்களுக்கெள்ளல்லாம்.... வழிகாட்டியாக இருக்கிறீர்கள்..... பாராட்டுக்கள்....
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
05-ஜூலை-201908:37:38 IST Report Abuse
INNER VOICE My Humble Pranams.Namaskarams. Great Service. God Bless you with good health, peace, happiness and long life
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X