அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
OPS,தப்புமா,பன்னீர்,தலை?,எம்.எல்.ஏ.,திக்,SC,supreme court,

புதுடில்லி: தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தி.மு.க., தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளாக செயல்பட்டது. இதையடுத்து 2017 பிப்ரவரியில் தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அரசு நம்பிக்கை ஓட்டு கோரியது. இதில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.

இதையடுத்து அரசுக்கு எதிராக ஓட்டளித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க., மற்றும் தினகரன் அணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 'இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 'இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.

சபாநாயகர் உத்தரவே இறுதியானது' என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தி.மு.க., சட்டசபை கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 'நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான

ஓட்டெடுப்பின் போது அரசுக்கு எதிராக ஓட்டளித்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

'சபாநாயகர் கடமை தவறும்போது அரசமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின்படி நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடலாம்'

என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது விசாரணை நடந்த நிலையில் அதை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஜனவரியில் ஓய்வு பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு விசாரிக்கப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேற்று ''நீண்ட நாட்களாக முடங்கி கிடக்கும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்'' என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து ''இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும்'' என உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
03-ஜூலை-201920:28:17 IST Report Abuse

PANDA PANDIநல்லவேளை இதற்கும் காரணம் congress dmk என்று இதுவரை ஸ்யாரும் கொக்கரிக்கவில்லை.

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
03-ஜூலை-201920:23:05 IST Report Abuse

PANDA PANDIஅருமை 🤣 விசாரிக்கப்படாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு. SO வழக்கு தேக்கம். இப்படித்தான் தேங்கி தேக்கி நாடு நல்ல முடிவுக்காக காத்துக்கிடவேண்டியுள்ளது. நன்று. Waiting for the SIGNAL.🎈

Rate this:
Ray - Chennai,இந்தியா
03-ஜூலை-201919:19:35 IST Report Abuse

Rayநித்யா கண்டம் பூர்ணாயுசு

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X