பதிவு செய்த நாள் :
மிதக்கிறது!
தொடர்ந்து பெய்து வரும் பேய் மழையால் மும்பை...
விமானம், ரயில், பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில், தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த, நான்கு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், தலைநகர் மும்பை, வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ரயில், பஸ், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கு ஒரே நாளில், 30 பேர் பலியாகி விட்டனர்.

பேய் மழை,மும்பை,மிதக்கிறது,விமானம், ரயில், பஸ், போக்குவரத்து,ஸ்தம்பிப்பு


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் மும்பை, புனே உட்பட பல மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

தண்ணீரில் மூழ்கின:


குறிப்பாக, மும்பை, புனேவில், நேற்று முன்தினம் முதல், இடை விடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மும்பை சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. ரயில், பஸ், விமான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தில், தண்ணீர் தேங்கியுள்ளது. இடை விடாது பெய்யும் மழையால், 54 விமானங்கள், வேறு வழியில் திருப்பிவிடப்பட்டன; 42 விமானங்களின் சேவை, ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து, மும்பைக்கு நேற்று காலை, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவன விமானம் வந்தது.

விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் நீர் இருந்ததால், விலகிச் சென்றது. எனினும், பெரும் விபத்து ஏற்படாமல், விமானத்தை, 'பைலட்' நிறுத்தினார். தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை, முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளதுடன், வீட்டை விட்டு, யாரும் வெளியில் வர வேண்டாம் என, மக்களை எச்சரித்துள்ளது. மழை காரணமாக, மும்பையில், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, மும்பையின், கிழக்கு மலாட் பகுதியில் உள்ள, பிம்ப்ரிபடா என்ற இடத்தில், நேற்று அதிகாலை, 2 மணியளவில், சுற்றுச்சுவர் இடிந்து, குடிசை வீடுகள் மீது விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி, 21 பேர் இறந்துவிட்டனர். மேலும், 50 பேர் காயம் அடைந்து, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரூ.5 லட்சம்:


தகவல் அறிந்து, மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு, 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் பட்னவிஸ் அறிவித்துள்ளார். இதே போல, கல்யாண் பகுதியில், உருது பள்ளி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று பேர் இறந்தனர். மும்பையில், வெள்ளம் பாதித்துள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை, விரைவில் வெளியேற்ற, மாநில அரசும், மும்பை மாநகராட்சியும் உத்தரவிட்டுள்ளன. எனினும், இடைவிடாது மழை பெய்வதால், வெள்ள நீரை வெளியேற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மீட்பு குழு வேதனை:

கிழக்கு மலாட் பகுதியில், சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் 10 வயது சிறுமி சிக்கினாள். சஞ்சிதா என்ற அந்த சிறுமி, உதவி கேட்டும், தண்ணீர் கேட்டும், அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து, இடிபாடுகளை அகற்றி, சிறுமியை மீட்க, மீட்புக் குழுவினர் பெரிதும் முயற்சித்தனர். இடைவிடாது மழை பெய்த போதும், இடிபாடுகளை அகற்றி, சிறுமியை மீட்க, மீட்புக்குழுவினர் வழி ஏற்படுத்தினர். ஆனால், சிறுமியின் இறந்த உடலை தான் மீட்க முடிந்தது. பல மணி நேர போராட்டம், தோல்வியில் முடிந்தது, மீட்புக்குழுவினரை வேதனையில் ஆழ்த்தியது. இதற்கிடையில், மும்பை புறநகர் பகுதியில், சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் தத்தளித்தப்படி, கார் ஒன்று சென்றது. காருக்குள் மழை நீர் புகுந்ததால், கார் மூழ்கியது. இதில் காரில் இருந்த இருவர் பலியாகினர்.


ஒரே நாளில் 375.2 மி.மீ.,:

மும்பையில், 2005ம் ஆண்டை தவிர்த்து, 45 ஆண்டுகளுக்கு பின், ஒரே நாளில், அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. மும்பையில், திங்கள் காலை, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 மணி வரை, 24 மணி நேரத்தில், 375.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த, 1974ம் ஆண்டு, ஜூலை, 5ம் தேதி தான், மும்பையில், ஒரே நாளில், 375.2 மி.மீட்டர் மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பின், மும்பையில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 375. 2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த, 2005ம் ஆண்டில், மும்பையில், ஜூலை மாதத்தில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு, ஜூலை, 26ல், ஒரே நாளில், 944 மி.மீட்டர் மழை பதிவானது. இந்த வெள்ளத்தில், 1,000க்கும் அதிகமானோர் இறந்தனர்.


6 தொழிலாளர்கள் பலி:

புனேவின் அம்பேகான் பகுதியில், கல்வி நிறுவனம் ஒன்றுக்கு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், வேலை செய்யும் தொழிலாளர்கள், நிறுவனத்தின் அருகிலேயே தற்காலிகமாக குடிசைகள் அமைத்து, தங்கியுள்ளனர். இந்நிலையில், பலத்த மழை காரணமாக, கல்வி நிறுவனத்தின் சுற்றுச்சுவர், நேற்று முன்தினம் இடிந்து, தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகள் மீது விழுந்தது. இதில், ஆறு பேர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இறந்த தொழிலாளர்கள், மத்திய பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
03-ஜூலை-201915:53:02 IST Report Abuse

ganapati sbஅடிக்கடி வரும் பெருமழை அவ்வப்போது நிகழும் தீவிரவாத தாக்குதல் எப்போதாவது நடக்கும் அரசியல் கலவரம் மட்டுமல்லாது இயல்பான பரபரப்பான நேரங்களில் கூட மும்பையில் ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர் கூட உதவிக்கொள்வது அதிகம் அந்த மனிதாபமானம் மிகுந்த மும்பை மக்கள் இந்த இயற்கை சீற்றத்திலிருந்து எப்போதும் போல விரைவில் மீண்டு வரட்டும்

Rate this:
03-ஜூலை-201909:13:40 IST Report Abuse

ஆப்புஜோலார்பேட்டை ரயிலை மும்பை வரைக்கும் உடலாமே...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஜூலை-201909:12:21 IST Report Abuse

ஆரூர் ரங்அங்கு நீரை சேமிக்கவும் முடியாது . மும்பை என்பது கடலால் சூழப்பட்ட தீவு . முழுவதும் நகரமயமானது என்பதால் நீர் நிலைகளை ஏற்படுத்தமுடியாது .அதிக மக்கள்தொகையுள்ள இடம் என்பதால் இன்னும் கஷ்டம்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X