11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு

Updated : ஜூலை 03, 2019 | Added : ஜூலை 03, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
ஓ.பி.எஸ்., பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள், தகுதி நீக்க வழக்கு, ஒத்திவைப்பு, சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளாக செயல்பட்டது. இதையடுத்து 2017 பிப்ரவரியில் தமிழக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அரசு நம்பிக்கை ஓட்டு கோரியது. இதில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பழனிசாமி அரசு வெற்றி பெற்றது.
இதையடுத்து அரசுக்கு எதிராக ஓட்டளித்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க., மற்றும் தினகரன் அணி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 'இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் 'இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சபாநாயகர் உத்தரவே இறுதியானது' என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.


latest tamil news




இதை எதிர்த்து தி.மு.க., சட்டசபை கொறடா சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடப்பட்டது இதையடுத்து, இந்த வழக்கு இன்று(ஜூலை 3) விசாரிணக்கு எடுத்து கொள்ளப்படும் என தலைமை நீதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதி நீக்க வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy Chakravarthy - Bangalore,இந்தியா
04-ஜூலை-201906:31:51 IST Report Abuse
Ramasamy Chakravarthy தேதி 30-07-2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது
Rate this:
Cancel
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
03-ஜூலை-201920:06:57 IST Report Abuse
LovelyMarees செந்தில் : அண்ணே ஏன் நீதிபதி தள்ளிவைச்சார்? கவுண்டமணி : ஒருவேளை நீதிபதி வரும் வழியை அடைத்து இந்த வழக்கின் கோப்புகளை நீதிமன்ற பணியாளர்கள் வைத்திருப்பர் அதான் நீதிபதி தள்ளிவச்சுட்டார்டா மண்டையா.
Rate this:
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
03-ஜூலை-201919:21:06 IST Report Abuse
shan எந்த கட்சிக்கு எதிரா ஒட்டு போட்டறார்களோ அவர்கள் நீக்க சொல்லாத போது இந்த திருட்டு திமுக வுக்கு உரிமை கோர என்ன உரிமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X