ராஜினாமா விளக்கம்: ராகுல் உருக்கம்

Updated : ஜூலை 03, 2019 | Added : ஜூலை 03, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: காங்., கட்சி தலைவர் பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.

புதுடில்லி: காங்., கட்சி தலைவர் பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்துள்ள ராகுல், தனது ராஜினாமா முடிவுக்கு காரணம் என்ன என்பது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.latest tamil news


அதில் அவர், லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்., கட்சியை மறுசீரமைக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது. கட்சியின் தலைவர் முறையில் 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நான் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். தோல்விக்கு நான் உட்பட பலர் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.


latest tamil news


சுமூகமான தலைமை மாற்றத்திற்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். கட்சியின் புதிய தலைமையை தேர்வு செய்வதற்கான சரியான ஆள் நான் இல்லை. நான் ராஜினாமா செய்து விட்டதால், உடனடியாக புதிய தலைவரை தேர்வ செய்யும்படி கட்சியினரிடம் கூறி உள்ளேன்.
பா.ஜ., மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது. அதே சமயம் பா.ஜ.,வின் கொள்கைகள் இந்தியாவை கட்டுப்படுத்த நினைப்பதை எனது உடலின் ஒவ்வொரு செல்லும் தடுக்கும். காங்., கட்சியின் கடைநிலை உண்மை தொண்டனாக எனது கடைசி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன்.


latest tamil newsபிரதமரும், ஆர்எஸ்எஸ்.,ம் நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களையும் கைப்பற்ற நினைப்பதை எதிர்த்தே எங்களின் போராட்டம். தேர்தல் நேர்மையாக நடைபெறாமல் ஒரு குறிப்பிட்ட கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற நினைக்கிறது.
லோக்சபா தேர்தலில் நாங்கள் ஒரு கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை. ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனப்படும் சக்திகளை எதிர்த்தே போட்டியிட்டோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jegan Nicholas - Tirunelveli,இந்தியா
04-ஜூலை-201906:51:40 IST Report Abuse
Jegan Nicholas நாட்டின் வளர்ச்சிக்கு மக்களை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது . கடிவாளம் இல்லாத குதிரை வண்டியை சரியானபதையில் இழுக்காது
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
04-ஜூலை-201906:26:15 IST Report Abuse
oce ராகுல் நீ குறிப்பிடும் ஜன நாயத்தின் அடித்தளம் எது. அதன் சக்தி எது. இந்த சொல் விளையாட்டெல்லாம் எங்களுக்கும் தெரியும். பாஜகவின் கொள்கைகள் இந்தியாவை கட்டுப்படுத்துவதை உனது ஒவ்வொரு செல்லும் எதிர்க்கும் என்று கூறுகிறாய். ராகுல் நீ ஜெயித்திருந்தால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும். அப்போது உன் கதையே வேறு மாதிரி மாறி இருக்கும். ஜெயித்தால் ஒரு பேச்சு தோற்றால் ஒரு பேச்சா. நீயும் உன் தாயாரும் முகத்தை வீணாக தொங்கப்போட்டுள்ளது தேவையற்றது. இந்தியாவின் நடுவில் ஒரு முஸ்லிம் நாட்டை ஏற்ப்டுத்தி அதற்கு சுதந்திரம் தந்தது யார். கச்சத்தீவை பிரித்து கொடுத்தது யார் ஆதிகாலத்தில் பிரசித்தி பெற்ற முனிவர்களும் காசியபர் போன்ற மகரிஷிகளும் வாழ்ந்த காஷ்மீரத்தை கூறு போட்டு ஆசாத் காஷ்மீர் என்ற பெயரில் பிரித்த்து யார். இது தான் நீ கூறும் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமா. காங்கிரஸ் கட்சி இந்திய பாரம்பரிய இந்து மத ஆணி வேரை அழிக்கும் சக்தி . அதை காப்பாற்ற தோன்றியதே பாரதிய ஜனதா கட்சி என்பதை நினைவில் கொள்.
Rate this:
Cancel
04-ஜூலை-201906:23:22 IST Report Abuse
mohamed yahya well said Rahul Gandhi sir..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X