பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் ஊழல் ஊழியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு

Updated : ஜூலை 04, 2019 | Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஊழல் அதிகாரிகள்,  கட்டாய பணி ஓய்வு,

லக்னோ : முறைகேடு செய்த, 200 அரசு ஊழியர்களுக்கு, கட்டாய பணி ஓய்வு கொடுக்க, உ.பி., அரசு அதிரடி முடிவு செய்துள்ளது. மேலும், 400 அதிகாரிகள், கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, கடந்த, 20ல், முதல்வர் ஆதித்யநாத், ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அப்போது, 'ஊழல் அதிகாரிகள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; தேவைப்பட்டால், அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்' என, கடுமையாக எச்சரித்தார்.


latest tamil news




இந்நிலையில், மாநிலத்தில் முறைகேடு செய்த, 600 ஊழியர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில், 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்க, யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். மேலும், 400 பேர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
04-ஜூலை-201921:56:00 IST Report Abuse
Viswanathan இங்கு தமிழகத்தில் இது போன்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் . ஒரு அதிகாரியும் தேற மாட்டான்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
04-ஜூலை-201920:26:00 IST Report Abuse
Vijay D Ratnam அதிரடி முதல்வர் யோகி ஆதித்யா மாதிரி ஆள்தான் சரியான நிர்வாகத்தை கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் லஞ்ச, ஊழல், கமிஷன் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பலாம் என்றால் 90 சதவிகிதம் அரசு பணியிடங்கள் காலியாகிவிடும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-ஜூலை-201919:40:41 IST Report Abuse
RajanRajan ஆகா, இது மட்டும் தமிழ்நாட்டு அரசு துறையில் அமல் படுத்த பட்டால் ஒரேயடியாக அத்தனை வேலையில்லா திண்டாட்டமும் தீர்ந்து விடுமே. கூடவே இந்த ஊழலுக்கு முட்டு கொடுக்கிற அரசு ஊழியர் கலாச்சாரமும் ஒழியுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X