குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங். எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்

Updated : ஜூலை 04, 2019 | Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங். எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்

காந்திநகர்: குஜராத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரம் நடப்பதாக எழுந்த புகாரில் காங். எம்.எல்.ஏ.க்கள் 69 பேர் நேற்று இரவு ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.வைச் சேர்ந்த அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகிய இருவரும் வென்றனர்.இதையடுத்து குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, தங்களது எம்.பி., பதவிகளை, இருவரும் ராஜினாமா செய்தனர்.' காலியாக உள்ள அந்த இரண்டு ராஜ்ய சபா இடங்களுக்கு, தனித்தனியாக ஜூலை, 5ல் இடைத் தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங். தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.


latest tamil news



குஜராத் சட்டசபையில், மொத்தம், 182 இடங்களில், பா.ஜ.,வுக்கு, 100; காங்.,குக்கு, 75, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஏழு இடங்கள் காலியாக உள்ளன. தற்போது காலியாக உள்ள இரு ராஜய்சபா இடங்களுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜூகால்ஜி தாக்கூர் ஆகிய இருவரும் பா.ஜ. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தேர்தலில் தங்களது காங். எம்.எல்.ஏ.க்கள் விலைபோகிவிடுவர், குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளது என கருதி நேற்று இரவோடு இரவாக 69 எம்.எல்.ஏ.க்களும் அழைத்துச்செல்லப்பட்டு பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பல்ராம் பேலஸ் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2017-ல் நடந்த களேபரம்


மாநில காங். தலைவர் அஸ்வின் கோட்வால் கூறியது, கடந்த 2017 ராஜ்யசபா தேர்தலில் மூன்று இடங்களில் ஒன்றில் காங். வேட்பாளராக நிறுத்தப்பட்ட அகமதுபடேலை வீழ்த்த பா.ஜ.வினர் நடத்திய, குதிரை பேரமும், களேபரமும் எல்லோருக்கும் தெரிந்ததே . எனவே முன்னெச்சரிக்கையாக தான் காங். எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்


Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-201913:17:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஆட்சிக்குத்தான் முன்னர் கடத்தினார்கள், தற்போது ராஜ்ய சபா ஒட்டுக்குமா?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
04-ஜூலை-201912:45:22 IST Report Abuse
Rafi கட்சி தொண்டர்கள் கடின உழைப்பை கொடுத்து வெற்றி பேரவைத்தும், அந்த நன்றியை மறந்து விலை போகும் குரோதகர்கள், இந்த கேவல நிலைக்கு வழிவகுக்கும் ஆட்சியாளர்கள். நாடு எங்கு சென்று கொண்டிருக்கு?? மக்கள் வேலைகளை விட்டு, விட்டு வெயிலில் கருகி வரிசையில் நின்று தங்கள் விரும்பும் கட்சியை தேர்ந்தெடுத்ததை அவமானப்படுத்தி விட்டார்கள். இது தொடர்ந்தால் மக்கள் ஜனநாயக கடமையை செய்ய முன்வர தயங்குவார்கள், அரசு இதில் கவனம் செலுத்தி,ஜனநாயகத்தை காக்க முன்வர வேண்டும்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
04-ஜூலை-201910:20:52 IST Report Abuse
அசோக்ராஜ் முதலில் வின்சியை காபந்து பண்ணுங்கப்பா. கட்சியை விட்டே ஓடுறாராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X