வனத்தில் கொட்டும் குப்பை விலங்குகளுக்கு ஆபத்து| Dinamalar

வனத்தில் கொட்டும் குப்பை விலங்குகளுக்கு ஆபத்து

Added : ஜூலை 04, 2019
Share
குன்னூர்:குன்னூர் பந்துமை, எடப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில், சுற்றுலா விடுதிகள; காட்டேஜ்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில், நீராதாரம் உள்ள வனப்பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த இடத்தில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தின் லாரி குப்பைகளுடன் இங்கு நிறுத்தியிருந்தது சர்ச்சையை
 வனத்தில் கொட்டும் குப்பை விலங்குகளுக்கு ஆபத்து

குன்னூர்:குன்னூர் பந்துமை, எடப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில், சுற்றுலா விடுதிகள; காட்டேஜ்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில், நீராதாரம் உள்ள வனப்பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், எடப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த இடத்தில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தின் லாரி குப்பைகளுடன் இங்கு நிறுத்தியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வனப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

'கிளீன் குன்னூர்' அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சமந்தா கூறுகையில், பந்துமை தடுப்பணையை சுற்றியுள்ள வனப்பகுதிகளில், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட குப்பைகளை இரவு நேரங்களிலும் கொட்டி செல்கின்றனர்,'' என்றார்.

நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் கூறுகையில்,''தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X