சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வலையில் விழுந்த ராக்கெட் மூக்கு!

Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (2)
Advertisement
வலையில் விழுந்த ராக்கெட் மூக்கு!

ஏவிய ராக்கெட்டின் பகுதிகளில், பெரும்பாலானவற்றை மறுபடியும் பயன்படுத்த வேண்டும். இதுதான் ஸ்பேஸ் எக்ஸ் அமைப்பின் நிறுவனர் எலான் மஸ்கின் குறிக்கோள்.
இதன்படி அண்மையில் ஒரு முதல் முயற்சியாக, 'பால்கன் ஹெவி' என்ற ராக்கெட்டின் மூக்குப் பகுதிகளில் ஒன்றை, கடலில் விழுகையில் வலை விரித்துப் பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ்.
ராக்கெட் சீறிப் பாயும்போது, வளிமண்டல அழுத்தத்தை தாங்குவதற்காக, அதிக பலம் வாய்ந்த கூம்பு ஒன்றை இணைத்திருப்பர். இந்தக் கூம்பு, வளிமண்டலத்தை தாண்டி, விண்வெளிக்குப் போனதும், இரண்டாகப் பிரிந்து கடலில் விழும். இந்தக் கூம்பின் இரு
பகுதிகளின் மொத்த விலை, 83 கோடி ரூபாய்! இது கடலில் விழாமல் பிடித்தால், மறுபடியும் அப்படியே பயன்படுத்த முடியும்.
எனவே தான், ஸ்பேஸ் எக்ஸ், ஒரு மிஸ்ட்ரீ என்ற சிறு கப்பலில், பெரிய வலையை விரித்து அனுப்பியது. சில தோல்விகளுக்குப் பிறகு, முதல் முறையாக ராக்கெட் மூக்கின் ஒரு பகுதியை வலையில் பிடித்தது.
பால்கன் ஹெவியின் மூன்று ராக்கெட் பகுதிகளும், விண்ணில், 25 செயற்கைக்கோள்களை ஏவிய பிறகு மீண்டும், அமெரிக்காவிலுள்ள கேப் கனேவரல் ஏவு தளத்திற்கே திரும்ப வந்து தரையிறங்கின.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
15-ஜூலை-201914:52:32 IST Report Abuse
JeevaKiran ஆ ஹா பரவாயில்லையே. நல்ல TECHNOLOGY.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
05-ஜூலை-201914:27:02 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஆஹாபிரமாதம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X