500 புதிய பேருந்து; முதல்வர் துவக்கி வைத்தார்| Dinamalar

500 புதிய பேருந்து; முதல்வர் துவக்கி வைத்தார்

Updated : ஜூலை 04, 2019 | Added : ஜூலை 04, 2019 | கருத்துகள் (4) | |
சென்னை: தமிழக அரசு சார்பில், 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 பேருந்துகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று 500 புதிய
500 புதிய பேருந்து; முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு சார்பில், 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 1500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.


கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 பேருந்துகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


சென்னை மாநகர போக்குவரத்திற்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.


இதேபோல, கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது ஒப்பந்தம் போட்டதன் அடிப்படையில் 16 நிறுவனங்களுக்கான அடிக்கற்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நட்டு வைத்தார்.


மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 7 கோடி ரூபாய் செலவில் 137 வகையான உபகரணங்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X