புதுடில்லி : 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள மோடி அரசின் 2வது பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் இன்று (ஜூலை 04) தாக்கல் செய்தார். ஜூலை 5 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியம் தயார் செய்த பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் :
* 2019-20 ம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 7 சதவீதமாக இருக்கும்.
* எண்ணை விலை குறையும்
* தேவை அதிகரிப்பதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் முதலீட்டு அளவு அதிகரிக்கும்
* 2018 ம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2019 ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* தேர்தல் நடவடிக்கை காரணமாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது.

* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 சதவீதம் இருக்க வேண்டியது கட்டாயம். இதே நிலை தொடர்ந்தால் 2025 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
* வர்த்தக பதற்ற நிலை காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.