பட்ஜெட் எப்படி? : தலைவர்கள் கருத்து

Updated : ஜூலை 05, 2019 | Added : ஜூலை 05, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.



latest tamil news





தலைவர்களின் கருத்து விபரம் :



மத்திய அமைச்சர் கட்காரி: புதிய இந்தியாவை உருவாக்க உள்கட்டமைப்புக்கு நிதி அமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். கடந்த 2018- 19 ல் எங்கள் அமைச்சகத்திற்கு ரூ.78,626 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது, ரூ.83, ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்: சமூகம் - பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் சிறப்பான பட்ஜெட்டாக உள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவது வெற்றி பெறும். எழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களின் நலன்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் : சுதந்திரத்திற்கு பிறகு முழு நேர பெண் நிதியமைச்சர் முதல் முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள். நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.

லோக்சபா காங்., அதிர் ரஞ்சன் சவுத்ரி : புதிதாக ஒன்றுமில்லை. பழைய வாக்குறுதிகளே மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் புதிய இந்தியா பற்றி பேசுகிறார்கள். ஆனால் பட்ஜெட், பழைய பாட்டிலில் ஊற்றப்பட்ட புதிய ஒயின். வேலைவாய்ப்பை அதிகப்படுத்த எந்த திட்டமும் இல்லை. புதிய அறிவிப்புக்கள் ஏதும் இல்லை.


latest tamil news




புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி : தொழில்நுட்பத்தை பயன்படுத்த நாட்டை முன்னெடுத்து செல்வதாக பட்ஜெட் அமைந்துள்ளது. பணம் படைத்தவர்களை அதிக வரி செலுத்த வைக்கும் வகையிலும், மற்றவர்களை தொந்தரவு செய்யாத வகையிலும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயார் செய்துள்ளார். முந்தைய வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பலம் பெறுவதாக பட்ஜெட் உரை உள்ளது.

பா.ஜ., தமிழிசை : நடுத்தர மக்களுக்கான பட்ஜெட். இனி அனைவருக்கும் வீடு. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல நல்ல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூலை-201909:08:32 IST Report Abuse
Saleem நடுத்தர மக்களுக்கான பட்ஜெட். இனி அனைவருக்கும் வீடு. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல நல்ல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன இது என்ன வென்று சொல்லமுடியுமா? நடுத்தர மக்கள், விவசாயிகள் என்ன பயனடைந்தார்கள்?
Rate this:
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
06-ஜூலை-201902:23:27 IST Report Abuse
Kunjumani சுடலை மற்றும் பிரியாணி மணியின் கருத்து என்ன?
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
05-ஜூலை-201923:55:08 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி லோக்சபா காங்., அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு சாராய பாட்டில்தான் உதாரணத்துக்கு கிடைத்ததா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X