கட்சி எப்படி வளரும் ? : ராகுல் கோபம்

Updated : ஜூலை 05, 2019 | Added : ஜூலை 05, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement

மும்பை : மும்பை வெள்ளத்தில் போது எல்லாரும் எங்கு போனீர்கள்? இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும் ? என மும்பையில் உள்ள காங்., மூத்த தலைவர்களை ராகுல் கடிந்து கொண்டுள்ளார்.



latest tamil news




கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக ராகுல் நேற்று மும்பை சென்றார். ராகுல் கோர்ட்டிற்கு வந்த போது, காங்., தொண்டர்களும், கட்சி தலைவர்கள் சிலரும் ராஜினாமா முடிவை திரும்பப் பெரும்படி வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்காமல் ராகுல் சென்றுவிட்டார்.


latest tamil news




கோர்ட்டில் ஆஜரான பிறகு மும்பையில் கட்சியின் மாநில தலைவர், முன்னாள் தலைவர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது, " மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கும் போது அனைவரும் எங்கே போனீர்கள்? சாமானிய மக்களுக்கு உதவி தேவைப்படும் போது தெருவில் இறங்கி உதவி செய்ய வேண்டும். ஆனால் கட்சியினர் யாரையும் தெருக்களில் காண முடியவில்லை. இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?" என கோபமாக பேசி உள்ளார்.

ஆனால் கோர்ட் வாசலில் கூச்சலிட்ட தலைவர்கள் யாரும், இந்த கூட்டத்தின் போது ராஜினாமாவை திரும்பப் பெறும்படி ராகுலிடம் வாய் திறக்கவில்லை.


latest tamil news




மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் விதமாக, பொது மக்களுடன் கட்சியினர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என ராகுல் அறிவுரை வழங்கி உள்ளார். அத்துடன் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனையிலும் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
06-ஜூலை-201905:05:29 IST Report Abuse
Gnanam வளரும் பருவம் மாறி தேயும் நிலை வருவது உலக இயல்பு. இருப்பதை வைத்து மக்களுக்கு ஏதாவது நல்ல காரியம் செய்தால் - அதாவது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் விதத்தில் திட்டம் தீட்டினால் மக்கள் வாழ்த்திக்கொண்டிருப்பார்கள்.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
06-ஜூலை-201904:54:52 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்று இந்த காட்ச்சிக்கு தலைவியாக சோனியா ஆனார்களோ அன்னிலேந்து கடிச்சி சாவ் ஆரம்பிச்சுட்டுது
Rate this:
Cancel
S A Sarma - Hyderabad,இந்தியா
06-ஜூலை-201902:21:24 IST Report Abuse
S A Sarma காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தேசியக் கட்சி நிலைமையை விட்டு, இந்தியாவின் மாநிலக் கட்சியாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக தோள் தேவை. கர்நாடகாவில் தேவ கெளடாவுடன் உறவு வேண்டும். ஆந்திராவில் என்றோ மறைந்து விட்டது. தெலுங்கானாவில் கட்சி வீராணம் போல்அழிந்து விட்டது. புதுவையில் புதிராக உள்ளது. ஓடிஷாவில், புயலில் காணாமல் சென்று விட்டது. மகாராஷ்ட்ராவில் பவார் இருக்கும் வரை அவரது கைகோர்க்க வேண்டும். மேற்கு வங்கத்தில் வங்கக் கடலில் மிதந்து கொண்டு உள்ளது. வட கிழக்கு மாகாணங்களில், மக்கள் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறத்தை அறிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஹரியானாவில் பூதக் கண்ணாடி வைத்துகொண்டு தேட வேண்டும். பஞ்சாபில் கேப்டன் இருப்பதால் கட்சி உள்ளது. ஆனால், அவரை வளர விட மாட்டார்கள். பீகாரில் , லாலுவுடன் தூங்கிக்கொண்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் போகவே பயம். குஜராத், ம. பி , ராஜஸ்தான் மாநிலங்களில் எந்த இளைய தலைவர்கள் வரக் கூடாது. பின் எப்படி காங்கிரஸ் கட்சி வளரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X