கட்சி எப்படி வளரும் ? : ராகுல் கோபம்| Dinamalar

கட்சி எப்படி வளரும் ? : ராகுல் கோபம்

Updated : ஜூலை 05, 2019 | Added : ஜூலை 05, 2019 | கருத்துகள் (30)
Share

மும்பை : மும்பை வெள்ளத்தில் போது எல்லாரும் எங்கு போனீர்கள்? இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும் ? என மும்பையில் உள்ள காங்., மூத்த தலைவர்களை ராகுல் கடிந்து கொண்டுள்ளார்.



latest tamil news




கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராவதற்காக ராகுல் நேற்று மும்பை சென்றார். ராகுல் கோர்ட்டிற்கு வந்த போது, காங்., தொண்டர்களும், கட்சி தலைவர்கள் சிலரும் ராஜினாமா முடிவை திரும்பப் பெரும்படி வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்காமல் ராகுல் சென்றுவிட்டார்.


latest tamil news




கோர்ட்டில் ஆஜரான பிறகு மும்பையில் கட்சியின் மாநில தலைவர், முன்னாள் தலைவர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரை அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது, " மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கும் போது அனைவரும் எங்கே போனீர்கள்? சாமானிய மக்களுக்கு உதவி தேவைப்படும் போது தெருவில் இறங்கி உதவி செய்ய வேண்டும். ஆனால் கட்சியினர் யாரையும் தெருக்களில் காண முடியவில்லை. இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?" என கோபமாக பேசி உள்ளார்.

ஆனால் கோர்ட் வாசலில் கூச்சலிட்ட தலைவர்கள் யாரும், இந்த கூட்டத்தின் போது ராஜினாமாவை திரும்பப் பெறும்படி ராகுலிடம் வாய் திறக்கவில்லை.


latest tamil news




மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் விதமாக, பொது மக்களுடன் கட்சியினர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என ராகுல் அறிவுரை வழங்கி உள்ளார். அத்துடன் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனையிலும் தலைவர்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X