விரைவில் 'சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும்'

Updated : ஜூலை 06, 2019 | Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (16)
Advertisement
விரைவில் 'சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும்'

புதுடில்லி: ''சர்வதேச கல்வி மையமாக திகழும் திறமை, இந்தியாவுக்கு உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.பட்ஜெட்டில், இது பற்றி அவர் கூறியதாவது:புதிய தேசிய கல்வி கொள்கை, விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும்




நோக்கில், உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்.சர்வதேச கல்வி மையமாக திகழ, இந்தியாவுக்கு திறமை உள்ளது. இந்தியாவில் படிக்க, வெளிநாட்டு மாணவர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.'என்சைக்ளோபீடியா' போல் 'காந்திபீடியா' திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம், காந்திய கொள்கைகள், இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை, இந்திய இளைஞர்கள் பெறுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும். நாடு தழுவிய அளவில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கவிக்க, தேசிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
06-ஜூலை-201914:00:04 IST Report Abuse
suresh kumar இப்பவே, பணமில்லாத இந்தியனுக்கு இந்தியாவில் உயர் கல்வி பயில வழியில்லை.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-201915:46:15 IST Report Abuse
uthappaஅதுதான் அறுபது ஆண்டு சாதனை. இனி மாறலாம்....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-201923:04:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஜியோவுக்கு வாருங்கள்.. ஜீரோ வாங்கினாலும் டிகிரி வாங்கி செல்லுங்கள்.. - எங்கள் தலைவர் டாக்டர் மோடி வாழ்க....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
06-ஜூலை-201913:25:15 IST Report Abuse
Gnanam ஒரு காலகட்டத்தில் சர்வதேச கல்வி மையமாக திகழ்ந்ததுதானே நமது புண்ணிய நாடு. மீண்டும் பலப்படுத்துவோம் தட்ஷசீலம்/ நாலந்தா கல்வி நுணுக்கங்களை. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
06-ஜூலை-201912:34:32 IST Report Abuse
pattikkaattaan சர்வதேச தரம் எல்லாம் அப்புறம் பார்க்கலாம் , முதலில் மாணவர்களின் விடைத்தாள்களை ஒழுங்காக மதிப்பீடு செய்யாமல் , "ரேண்டம் அரியர்ஸ் " போட்டு , பிறகு மறுபடியும் மறுமதிப்பீட்டிற்கு பணம் கட்ட வைத்து பாஸ் ஆக்குவதை நிறுத்துங்கள் .. கோட்டா முறையில் இடஒதுக்கீடு கொடுப்பதை ஒழியுங்கள் .. தகுதி வாய்ந்த பேராசியர்களை நியமனம் செய்யுங்கள் .. தரம் தானாக உயரும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X