வேளாண் துறையில் புரட்சி வரும்: மோடி

Added : ஜூலை 06, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

வாரணாசி: சமீபத்திய பட்ஜெட் மூலம் இந்தியா பெரும் வளர்ச்சியை அடையும் என்றும் 5 டிரில்லியன் பொருளாதார நாடாக இந்தியா மாறும், வேளாண் துறையில் பெரும் புரட்சி ஏற்படும் என்றும் பிரதமர் மோடி வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார்.latest tamil news
பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி விழாவில் பேசியதாவது: சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நிறைவேற்றுவோம். இன்று லால் பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்ற முயற்சி செய்கிறோம். இது நேற்றைய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா வேகமாக ஓடுகிறதுஇந்தியாவின் மதிப்பு தெரியாதவர்கள் இதனை ஏளனம் செய்கின்றனர். எதிர்கட்சியின் விமர்சனம் எனக்கு மேலும் வலுவைத்தான் தருகிறது. நிச்சயம் இலக்கை அடைவோம். புதிய இந்தியாவில் ஏழைகள் பணக்காரர்களாக மாறுவர். சமீபத்திய பட்ஜெட் ஏழைகளின் முன்னேற்றத்திற்கானது. கடந்த காலத்தில் இந்தியா மெதுவாக நடந்தது. ஆனால் இன்று புதிய இந்தியா வேகமாக ஓடத்துவங்கி உள்ளது. பொருளாதாரத்தால் உலக முக்கிய நாடுகள் திணறி வருகின்றன. ஆனால் இந்தியா வலுவாக உள்ளது. சிறப்பான பட்ஜெட் மூலம் 5 டிரில்லியன் பொருளாதார நாடு என்ற இலக்கை நிச்சயம் அடைவோம்.


latest tamil newsநாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்கு பெற வேண்டும். சோலார் எரிசக்தியை பெருக்கிடவும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் இந்த பட்ஜெட்டில் வழி ஏற்பட்டுள்ளது. நாட்டில் தண்ணீர் பிரச்சனை பெரும் சவாலாக உள்ளது. தண்ணீரை அனைவரும் சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பதன் மூலம் மின்சாரம் கூடுதலாக பெற முடியும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.நமது அரசின் ஆயூஸ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 34 லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். பிரதமர் சுகாதார நிதி வழங்கும் திட்டத்தின் மூலம் பலர் பயன் பெற்று வருகின்றனர். நமது திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தூய்மை இந்தியா திட்டம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. சுற்றுலா வளர்ச்சி அடைவதன் மூலம் வேலை வாய்ப்பு உருவாகுகிறது. யோகா மிக சிறந்த ஆரோக்கியமான விஷயம். அனைவரும் யோகா தவறாமல் செய்யுங்கள். யோகா மனிதரை வலுவானவராகவும், தகுதியானவராகவும் மாற்றும்.


கிராம முன்னேற்றம் அவசியம்பட்ஜெட்டில் அனைத்து முன்னேற்ற விஷயங்களும் அடங்கி உள்ளன. விவசாயிகள் ,தொழிலாளர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்கள் உள்ளன. விவசாயிகள் வருமானம் பெருகும். மேக் இன் இந்தியா திட்டம் மூலம்மேலும் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் . அடிப்படை கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும். கிராம முன்னேற்றம் முக்கிய கவனம் எடுத்து கொள்ளப்படுகிறது. ஆகையால் சிறப்பான பட்ஜெட் மூலம் 5 ஆண்டுகளில் பல்வேறு இலக்கை எட்டுவோம். பெரும் கனவை கொண்டால் தான் பெரும் வெற்றியை பெற முடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக அவர் லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
07-ஜூலை-201910:44:07 IST Report Abuse
konanki சமீபத்திய புயலில் டெல்டா மாவட்டங்களில் பொள்ளாச்சி உடுமலை பகுதியில் தென்ன மரங்கள் சேதம்.பொள்ளாச்சி தென்னை விவசாயிகள் தென்னை மரங்களுக்கு இனஷிரன்ஸ எடுத்தால் நஷ்டம் இல்லை இன்ஷரனாஸ் கம்பெனிகள் பணம் கொடுத்துட்டாங்க ஓரு மரத்திற்கு ஓரு வருஷத்துக்கு 12ரூ பிரிமியம் கட்டினர் (அரசாங்கம் மீதி பிரிமியம் மான்யமா கம்பெனிக்கு குடுக்கும்) ஆனால் ‌‌‌டெல்டா மாவட்டங்களில் இந்த இன்ஷரனாஸ் எடுக்க லே.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
07-ஜூலை-201910:28:25 IST Report Abuse
konanki தமிழ் நாட்டில் மானம் பாத்த பூமி யான் வட/தென் ஆற்காடு மாவட்டத்தில் 800 அடி bore போட்டு பயிர் வக்கராங்க வேலைக்கு ஆள் கிடையாது கிடைத்தாலும் க கூலிக்கு ஏத்த உழைப்பு இல் ல டெல்டா மாவட்டங்களில் 100 அடிக்குள்ளேயே தண்ணீர் கிடைக்குது ஆனால் அவங்க boreபோட்டு பயிர் பண்றதில்லே
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
06-ஜூலை-201918:02:36 IST Report Abuse
sathiya narayanan என்ன சாமி எல்லார் காசு கொடுத்து நிலத்தை எல்லாம் வாங்கி விவசாயிகளை பணக்காரர்களாக மாற்ற போகிறீர்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X